இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு – 2 புதிய மாற்றங்கள்

0
229
Ben Stokes England test team

இந்திய அணி தற்போது இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் ஒரு டெஸ்ட், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி நாளை துவங்கி ஐந்தாம் தேதி வரை பர்மிங்ஹாமில் நடக்கிறது!

இந்த ஒரு டெஸ்ட் போட்டி, கடந்த ஆண்டு இந்தியா இங்கிலாந்திற்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் விளையாட சென்று, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் திரும்பிய டெஸ்ட் போட்டியாகும். தற்போது இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருக்கிறது. இந்தப் போட்டியில் குறைந்தது டிரா செய்தால் இந்திய தொடரை வெல்லும். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்யும்,

- Advertisement -

மேலும் கடந்த ஆண்டு கோவிட் தொற்றைக் காரணம் காட்டி, தொடரின் கடைசி டெஸ்டான ஐந்தாவது டெஸ்டை இந்திய அணி இரத்து செய்தது. இது அப்போது கடுமையான விமர்சனங்களை உருவாக்கி இருந்தது. இந்திய அணி இந்தத் தொடரிலிருந்து நேராக, 2021ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் இரண்டாம் பாகம் யு.ஏ.இ-ல் நடக்க, அதில் பங்கேற்க சென்றது. இதனால் ஐ.பி.எல்-காக இந்திய அணி டெஸ்ட் தொடரை இரத்து செய்தது, இது கேலிக்கூத்தானது என்று இஙீகிலாந்து கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தத் தொடர் கடந்த வருடத்தில் நடந்த பொழுது இங்கிலாந்து அணியில் அப்போதைய கேப்டன் ஜோ ரூட் தவிர யாரும் பேட்டிங் பார்மில் இல்லை. ஆனால் இந்த ஆண்டு கதையே வேறு. ஜோ ரூட்டும் பேட்டிங் பார்மில் இருக்கிறார், கூடவே ஒலி போப், ஜானி பேர்ஸ்டோவும் அருமையான பார்மில் இருக்கிறார்கள். மிக முக்கியமாக கேப்டனாக பென் ஸ்டோக்சும், பயிற்சியாளராக பிரன்டன் மெக்கல்லமும் வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாளை டெஸ்ட் போட்டிக்கான விளையாட இருக்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது

ஜாக் க்ரேவ்லி
அலெக்ஸ் லீஸ்
ஒலி போப்
ஜோ ரூட்
ஜானி பேர்ஸ்டோ
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்)
சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்)
மேத்யூ போட்ஸ்
ஸ்டூவர்ட் பிராட்
ஜாக் லீச்
ஜேம்ஸ் ஆன்டர்சன்

- Advertisement -