எலிசபெத் மரணத்தால் கிரிக்கெட் போட்டி தடை. போர் கொடி தூக்கிய ஸ்டோக்ஸ்

0
56
Ben Stokes


தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் பிரிட்டன் குயின் எலிசபெத் உயிரிழந்ததால் கைவிடப்பட்டது. லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் போட்டி நேற்று தொடங்க இருந்தது ஆனால் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -


இதனையடுத்து, 2வது நாள் ஆட்டம் மகாராணி எலிசபெத்தின் உயிரிழந்ததை அடுத்து கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பிரிட்டன் முழுவதும் தூக்கம் அணுசரிக்கப்படுவதால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கிரிக்கெட், இங்கிலாநது நாட்டின் தேசிய விளையாட்டு என்பதால், குயின் எலிசபெத் மரணத்தால் கிரிக்கெட் போட்டி கூடுதலாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவை விமர்சிக்கும் வகையில் , கேப்டன் பென் ஸ்டோக்ஸ், டிவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில் மகாராணி எலிசபெத்க்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டோக்ஸ்இ இதனால், அவரின் நினைவாக கருப்பு பட்டை அணிந்து போட்டியை தொடருவதே சரி என்று நினைப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். பிரிட்டன் முழுவதும் துக்கம் அணுசரிக்கப்படுவதால், இந்த வார இறுதியில் நடைபெறும் அனைத்து கால்பந்து ஆட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மகாராணி எலிசபெத்துக்கு கிரிக்கெட் போட்டி என்றால் மிகவும் பிடிக்கும் என்பது உண்மை.பாரம்பரியமிக்க ஆஷஸ் கிரிக்கெட் போட்டியை லண்டனில் நடைபெறும் போதெல்லாம் மகாராணி எலிசபெத் நேரடியாக மைதானத்திற்கு வந்து கிரிக்கெட் போட்டியை ரசித்திருக்கிறார். விளையாட்டு மீது அதிக ஆர்வம் உடைய எலிசபெத் ஸ்ட்ராஸ், குக் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு சர் பட்டங்களை வழங்கி இருக்கிறார். உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் நடைபெறும் போதெல்லாம் அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் அழைத்து எலிசபெத் மகாராணி தேனில் இருந்தும் வழங்கியிருக்கிறார்

இதேபோன்று டென்னிஸ் போட்டியிடும் மகாராணி எலிசபெத்துக்கு அதீத ஆர்வம் இருந்திருக்கிறது. விம்பிள்டன் போட்டிகள் நடைபெறும் போதெல்லாம் எலிசபெத் மகாராணி நேரடியாக மைதானத்திற்கு சென்று போட்டியை முழுவதும் ரசிப்பார்கள்.