நான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு எப்பவும் துரோகம் செய்யல.. நடந்த உண்மை இதுதான் – பிராவோ பேட்டி

0
174
Bravo

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பொதுவாக வெளியில் டி20 லீக்குகள் விளையாடவே விரும்புகிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திர வீரர் டிவேன் பிராவோ தன் விஷயத்தில் நடந்த உண்மை என்னவென்று கூறி இருக்கிறார்.

உலக டி20 கிரிக்கெட்டின் அடையாள வீரர்களில் ஒருவராக பிராவோ இருந்து வருகிறார். ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கும் மேல் கைப்பற்றியவராகவும், ரசிகர்களால் மறக்க முடியாத சில இன்னிங்ஸை பேட்டிங்கில் கொடுத்தவராகவும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் குழப்பங்கள்

1970 மற்றும் 80களில் உலகில் எந்த அணியாலும் வெல்ல முடியாத அளவுக்கு பலம் வாய்ந்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் இருந்தது. பின்பு 90களில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் சரிவு ஏற்பட்டு இறுதியாக தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியாத அளவிற்கு வந்து நிற்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் இளைஞர்கள் கூடைப்பந்து மற்றும் தடகளம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி கிரிக்கெட் பக்கம் வருவதை நிறுத்தியதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடக்கூடிய வீரர்களும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்குகளில் விளையாடவே ஆர்வம் காட்டுகிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

- Advertisement -

டிவேன் பிராவோ நெகிழ்ச்சி விளக்கம்

இது குறித்து பிராவோ கூறும் பொழுது “நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட எப்பொழுதும் அடுத்தது கிடையாது. வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடுவதற்கு மட்டுமே என்னை தயார் படுத்தி வைத்ததும் கிடையாது. இவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாட விரும்பவில்லை, இவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லை என்கின்ற கருத்து உருவாக்கப்பட்டு விட்டது”

“நீங்கள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு விளையாட தேர்ந்தெடுக்கப்படாத பொழுது, சரி நான் போய் வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடலாம் என்கின்ற மனநிலைதான் இருந்தது. அந்த சூழ்நிலையில் எனக்கு அதைத் தவிர வேறு வாய்ப்புகள் எதுவும் இல்லை”

இதையும் படிங்க :

“2010 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அங்கிருந்து என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை மேலும் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படியே திடீரென வெட்டப்பட்டது. இது என்னுடைய முடிவு கிடையாது. நான் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு திடீரென வாய்ப்பு மறுக்கப்பட்டேன். அப்பொழுது எனக்கு வயது பெறும் 26” என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -