லசித் மலிங்காவின் 14 வருடச் சாதனையை சமன் செய்துள்ள சென்னை ஆல்ரவுண்டர் பிராவோ

0
183
Dwayne Bravo and Lasith Malinga

2022ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை அணியில் அதிகபட்சமாக மகேந்திர சிங் தோனியும் 38 பந்துகளில் 50* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணியில் சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 4 ஓவர் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடிய ரஹானே 44 ரன்கள் குவித்தார்.

லசித் மாலிங்கவின் சாதனையை சமன் செய்த டுவைன் பிராவோ

நேற்றைய போட்டியில் சென்னை அணியில் டுவைன் பிராவோ 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 170 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் பட்டியலில் லசித் மலிங்கா (122 போட்டிகளில் 170 விக்கெட்டுகள்) முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவரது சாதனையை டுவைன் பிராவோ சமன் செய்திருக்கிறார்

- Advertisement -
ஐபிஎல் தொடரில் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள்

லசித் மலிங்கா – 170 (122 போட்டிகள்)

டுவைன் பிராவோ – 170(151 போட்டிகள்)*

அமித் மிஸ்ரா – 166(154 போட்டிகள்)

அதேபோல ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை 3 ஃபெர் (ஒரு இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றுவது) எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு தமிழகம் முன்னேறி உள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக 3 ஃபெர் எடுத்த பந்துவீச்சாளர்கள் :

ஐபிஎல் வரலாற்றில் அதிக 3 பேர்

19 – லசித் மலிங்கா

17 – அமித் மிஸ்ரா

16 – ஜஸ்பிரித் பும்ரா

15 – டுவைன் பிராவோ*