கவலைப்படாதிங்க இந்த டீம் ரெண்டு உலகக் கோப்பையை நிச்சயம் அடிக்கும் – ரவி சாஸ்திரி நம்பிக்கை பேச்சு!

0
517
Ravi Shashthri

நடந்துமுடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாளை தொடரை இந்தியா இழந்தாலும், அணி வலுவாகவே உள்ளது என முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டரும் , தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறுகிறார் . அவர், 2013 ஆம் ஆண்டுக்குப் பின் இந்திய ஆடவர் அணியின் ஐசிசி கோப்பைக்கான தாகம் தீருவது வெகு தொலைவில் இல்லை என்றும் இந்த நிச்சயம் கோப்பையை வெல்லும் என நம்புகிறார்.

மேலும் அவர் தற்போதைய இந்திய அணியில் சீனியர்கள், இளைஞர்கள் சரியான கலவையில் இருப்பது பலமே ! இந்த அணி விரைவில் ஐசிசி உலகக்கோப்பை பட்டத்தை கைப்பற்றும் என்று அவர் கூறியுள்ளார் .

- Advertisement -

ஐசிசி கோப்பைகளுக்கான இந்தியாவின் காத்திருப்புக்கு பதிலளித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை உதாரணங்களாக ரவி சாஸ்திரி காட்டுகிறார்.

இந்திய அணியின் உலகக்கோப்பை வாய்ப்பு குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ” இந்த உலக கோப்பை இந்தியாவில் நடைபைற இருப்பது , இந்தியாவுக்கு நன்மையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து இறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகளை எட்டினார்கள்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்
“சச்சின் டெண்டுல்கரைப் பாருங்கள். அவர் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல ஆறு உலகக் கோப்பைகளில் விளையாட வேண்டியிருந்தது. ஆறு உலகக் கோப்பைகள் என்றால் 24 ஆண்டுகள். மேலும் அவரது கடைசி உலகக் கோப்பையில் அவர் வென்றார். அடுத்ததாக லியோனல் மெஸ்ஸியைப் பாருங்கள். அவர் ஒரு கிளாசிக் உதாரணம் ஆவார். அவர் எவ்வளவு நேரம் விளையாடுகிறார். அவர் கோப்பைகளை வெல்லத் தொடங்கியபோது, ​​​​கோபா அமெரிக்கா மற்றும் உலகக் கோப்பையை வரிசையாக வென்றார். மற்றும் இறுதிப் போட்டியிலும் கோல் அடித்தார். எனவே நீங்கள் அனைவரும் காத்திருக்க வேண்டும். உங்கள் காட்டில் நிச்சயம் மழை பெய்யும் ” என்று கூறினார்.

- Advertisement -

இந்தியா அணி குறித்து கூறுகையில் ” வலுவான பேட்டிங் மற்றும் பவுலிங் கொண்டுள்ள இந்த அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை இரண்டையும் வெல்ல முடியும். அப்படி நடந்தால், விமர்சகர்கள் அனைவரும் அமைதியாகி விடுவார்கள். அதன் பின் அனைவரும் கொண்டாடா தயாராகிவிடுவார்கள் ” என்று கூறினார் .

2023 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதத்தில் இந்தியாவிலும் , வரும் ஜீன் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.