“கவலைய விடுங்க இந்திய பவுலிங் யூனிட்டுக்கு புது தலைவர் கிடைச்சாச்சு” – 746 விக்கெட் எடுத்த லெஜெண்ட் பிரமிப்பு பேச்சு!

0
5579
Siraj

இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சுமாராக இருந்த பொழுதும் இந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருப்பதற்கு முக்கிய காரணமாக எட்டி எட்டி பார்க்கும் மழை இருக்கிறது!

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வெற்றி பெறும் நோக்கத்தில் இல்லாமல் போட்டியை டிரா செய்யும் நோக்கத்தில் மிக மிக மெதுவாக விளையாடுகிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் மிகவும் மந்தமாக இருந்தது.

இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கட்டுகள் மட்டும் இழந்து 200க்கும் மேற்பட்ட ரன்களை வெஸ்ட் இண்டீஸ் எடுத்திருந்தது. ஒரு பக்கம் மழையின் குறுக்கீடு இருக்க, போட்டி டிராவில் முடிவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தது. போட்டி டிராவில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முடிந்தால் அது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு சிறிய பின்னடைவை உருவாக்கும்.

இந்த நிலையில் நான்காவது நாளில் புதிய பந்தை கையில் எடுத்த முகமது சிராஜ் ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கெமார் ரோச், சனான் கேப்ரியல் என வரிசையாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் இறுதி கட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களை 255 ரன்கள் தடுத்து நிறுத்தினார். மேற்கொண்டு இந்திய அணி விளையாடிய இலக்கை நிர்ணயித்து, போட்டியை வெல்வதற்கான நேரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். முகமது சிராஜ் மொத்தமாக இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 60 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் 746 சர்வதேச கிரிக்கெட் விக்கட்டுகள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் முன்னாள் வேகபந்துவீச்சாளர் கோர்ட்னி வால்ஸ் கூறும்பொழுது ” இந்திய வீரர்கள் தங்களுடைய பாத்திரங்களை புரிந்து மிகச் சரியாக பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்கள். முகமது சிராஜ் இந்திய வேகப்பந்துவீச்சுப் படையின் தலைவர் தான் என்பதை உணர்ந்து இருந்தார். மேலும் அணியில் ஒரு அறிமுக வேகப்பந்துவீச்சாளர் வேறு இருக்கிறார்.

எனவே முகமது சிராஜ் கையை உயர்த்தி ‘கேளுங்கள் நான் முன்னின்று செயல்பட்டு அணியின் மற்ற பந்துவீச்சாளர்களையும் தலைவராக வழிநடத்த போகிறேன்’ என்று செயல்பாட்டின் மூலம் கூறியிருக்கிறார். இதை அவர் எடுத்த விக்கட்டுகள் மூலம் மட்டும் அவர் காட்டவில்லை, அவரது முழு அணுகுமுறை, அவரது திட்டம் மற்றும் ஆக்ரோஷம் என எல்லாவற்றிலும் தான் இந்திய வேகப்பந்துவீச்சு படையின் தலைவர் என்று காட்டியிருக்கிறார்.

இந்திய அணியின் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களாலும் நான் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். அவர்கள் காட்டிய கட்டுப்பாடு மற்றும் புதிய பந்தில் பெற்ற ஸ்விங், வெளிப்படையாக ஒரு வேகப்பந்துவீச்சாளராக நீங்கள் இதைப் பார்க்கத்தான் விரும்புவீர்கள். அவர்கள் தங்களின் முதுகை வளைத்து அதற்கான வெகுமதியை பெற்று இருக்கிறார்கள்!” என்று வாழ்த்தி பாராட்டி கூறியிருக்கிறார்!