நான் கடுமையான முடிவுகளை எடுக்க விரும்பவில்லை- வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா பேச்சு!

0
557
Rohitsharma

பதினாறாவது ஐபிஎல் சீசனில் மூன்று நாட்களாக தொடர்ந்து பரபரப்பான ஆட்டங்களாக அமைந்து வருகிறது. இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்ட போட்டியும் கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்று முடிந்தது. இந்தப் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

முதலில் விளையாடிய டெல்லி அணி டேவிட் வார்னர் மற்றும் அக்சர் பட்டேல் அரை சதத்தின் உதவியுடன் 10 விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. குறைந்தபட்சம் 180 ரன்களை தாண்ட வேண்டியதை டெல்லி அணி கோட்டை விட்டது.

- Advertisement -

இதற்கு அடுத்த விளையாடிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா இஷாந்த் கிஷான் முதலில் 71 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அடுத்து ரோகித் சர்மா உடன் திலக் வர்மா இணைய இந்த ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதை அடுத்து போட்டி எளிதாக முடியும் என்று இருந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் ஆட்டம் இழக்க, டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் இருவரது கூட்டணி ஆட்டத்தை கடைசி பந்துக்கு வரை கொண்டு சென்று, மயிரிழையில் ரன் அவுடில் இருந்து தப்பி வென்றது.

வெற்றிக்குப் பிறகு, 45 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 65 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது ” ஆட்டத்தை வெல்வதும், தோல்வியிலிருந்து கடப்பதும் முக்கியமான விஷயம். நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம். ஐபிஎல் தொடருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக கேம்ப் அமைத்து பயிற்சி செய்து வந்தோம். இந்த முடிவை பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நாங்கள் கொண்டாடப் போகிறோம். நாங்கள் சமீபத்தில் இங்கு ஒரு டெஸ்ட் போட்டியை விளையாடினோம். ஆடுகளம் அதேபோல்தான் இருக்கிறது. எனவே போட்டியின் போது சீக்கிரத்தில் மெதுவாக பந்து வீசுபவர்களை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். 173 துரத்தக்கூடிய ரன்தான் என்று நினைத்தோம். எல்லோருமே அவர்களது பங்களிப்பை நன்றாகச் செய்தார்கள் என்று கூறினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” நான் பேட்டிங் செய்ய சென்ற பொழுது பவர் பிளேவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். ஏனெனில் ஆட்டம் தொடர்ந்து நடக்கும் பொழுது அவர்களிடம் இரண்டு தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் அவர்களை விளையாடுவது கடினம் என்று தெரியும். அதனால் பார்ட்னர்ஷிப்ளை அமைக்க முடிவு செய்து திலக் உடன் அதை மிகச் சரியாக செய்தோம். இங்கு புதிய பேட்டர் வந்து ஆடுவது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் சொன்னது போல எங்களிடம் நிறைய இளம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இந்த வெற்றி அவர்களது திறமையை மீது அவர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கும். நாங்கள் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை விரும்புகிறோம். முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் கடினமான மாற்றங்களை செய்ய விரும்பவில்லை!” என்று கூறியிருக்கிறார்!