“ஒரு பிளேயர் கேட்சை விட்டால் திட்டாதீங்கப்பா!” – மகேந்திர சிங் தோனி புதிய கருத்து!

0
1820
MSD

இந்திய கிரிக்கெட் அணியில் மிக வெற்றிகரமான கேப்டன் என்றால் முதல் பெயராக மகேந்திர சிங் தோனியின் பெயர்தான் இடம்பெறும். 20 ஓவர் உலக கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன் டிராபி என மூன்றையும் வென்ற ஒரே கேப்டனாக கிரிக்கெட் உலகில் அவர் மட்டும் தான் இருக்கிறார்.

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திவரும் ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் மகேந்திரசிங் தோனி தான். நான்கு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதோடு அதிக முறை ப்ளே ஆப் சுற்றுக்கும்,அதிக முறை இறுதிப் போட்டிக்கும் அணியை அழைத்துச் சென்றவராக இருக்கிறார்.

- Advertisement -

2007 ஒருநாள் போட்டி உலக கோப்பையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து முதல் சுற்றோடு வெளியேறி வந்தபொழுது, அந்தத் தோல்வி ரசிகர்களை வீரர்களின் வீடுகளை தாக்கும் அளவுக்கு வெறியேற்றி இருந்தது. இதையடுத்து அதே வருடம் ஐசிசி 20 ஓவர் போட்டிக்கான உலக கோப்பையை நடத்தியது. இந்த உலகக் கோப்பை தொடரில் இளைஞர்களைக் கொண்ட அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் களம் காணட்டும் என்று சச்சின் கூற, அதை ஏற்ற இந்திய அணி நிர்வாகம் மகேந்திர சிங் தோனி கேப்டனாக கொண்டு ஒரு இளம் அணியை டி20 உலகக் கோப்பைக்கு அனுப்பிவைத்தது.

அந்த உலகக் கோப்பையை வென்ற அதிலிருந்து மகேந்திர சிங் தோனி என்ற கிரிக்கெட்டர் இந்தியாவின் மிக முக்கியமான மனிதர்களில் ஒருவராக மாறிப்போனார். ஆட்டத்திற்காக அவர் வைத்திருக்கும் முடிவுகள் மிக எளிமையாக இருக்கும். அதேபோல் ஆட்டத்திற்கு நடுவில் தேவைப்படும் முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதில் அவர் வல்லவர். அதேபோல் அணியையும் வீரர்களையும் மிக நேர்த்தியாக வழிநடத்தவும் கூடியவர். இன்றுவரை கிரிக்கெட் உலகில் இந்தக் கலவையில் இவரைப்போல ஒரு கேப்டனை யாரும் பார்க்கவில்லை.

ஆட்டத்தின்போது திட்டங்களை களத்தில் செயல்படுத்துவதிலும், திட்டங்களை திடீரென்று மாற்றி அதற்கு வீரர்களை உடனுக்குடன் தயார்படுத்துவதும், எதிரணி வீரர்களின் மூளைக்குள் புகுந்து தங்கள் அணிக்கு தேவையான மாற்றங்களை உருவாக்குவதையும் இவர் ஒரு வாடிக்கையாகவே செய்து வந்தார். கேப்டனாக மட்டும் அல்லாமல் பேட்டிங்கிலும் ஒரு இனி பினிஷராக மிகத் தந்திரமாக புத்திசாலித்தனமாக விளையாடி பல வெற்றிகளை கொண்டு வந்தவர்.

- Advertisement -

இன்று மகேந்திர சிங் தோனி ஒரு தளத்தில் மிக முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். குறிப்பிடும்படியாக மகேந்திர சிங் தோனி கூறியுள்ள ஒரு கருத்து ” ஒரு வீரர் கேட்சை தவறவிட்டால், தவறாக ஃபீல்டிங் செய்தால் அதற்காக கோபப்படக் கூடாது. ஏனென்றால் அந்த விஷயத்திற்கு கோபம் உதவாது மற்றும் தீர்வாக அமையாது. மைதானத்தில் நூறு சதவீத உழைப்பை கொடுத்து ஒரு வீரர் கேட்சை தவறவிட்டாலோ, சரியாக பீல்டிங் செய்யாவிட்டாலோ அதில் எனக்கு எந்த பிரச்சனையும் வருத்தமும் கிடையாது ” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் விக்கெட்டுக்கு இடையில் ரன்களுக்காக ஓடுவது குறித்து பேசியுள்ள மகேந்திர சிங் தோனி ” நான் இன்சமாம் உல் ஹக் பாயுடன் ரன் எடுக்க ஓடுவதாக இருந்தால், நான் எனது வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி குறைத்துக் கொள்ளாவிட்டால் நிச்சயம் ரன்அவுட் நடக்கும் ” என்று தெரிவித்து இருக்கிறார்.