சச்சினுக்கு செய்தது போல் இனி யாருக்கும் செய்ய வேண்டாம் – டிராவிட்டிடம் முகமது கைஃப் கோரிக்கை

0
2313

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது . இதில் முதலில் ஆடிய இந்திய அணி 404 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது இதனை அடுத்த ஆடிய பங்களாதேஷ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 133 ரண்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

மூன்றாம் நாளான இன்று தனது ஆட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ் 150 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது . இதனால் 254 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே ரன்யெடுக்கும் வேகத்தில் ஆடியது . துவக்க வீரர்களான சுப்மண் கில் மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் அதிரடியாக ரன் சேர்த்தனர் .

- Advertisement -

உணவு இடைவேளைக்குப்பின் கேப்டன் கே எல்.ராகுல் 23 ரண்களில் ஆட்டம் இழந்த நிலையில் சுப்மண் கில் உடன் ஜோடி சேர்ந்தார் புஜாரா . இருவரும் இந்திய அணியின் எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினர் . சிறப்பாக ஆடிய கில் தனது அரை சதத்தை பதிவு செய்தார் . அதன் பிறகு தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் தனது டெஸ்ட் கிரிக்கெட் கேரியர் இன் முதல் சதத்தை பங்களாதேஷ் அணிக்கு எதிராக பதிவு செய்தார். 110 ரண்கள் எடுத்திருந்த நிலையில் சுப்மண் கில் ஆட்டம் இழந்தார்.

இந்தியாவின் வருங்கால கிரிக்கெட் ஸ்டாராக பார்க்கப்படும் சுப்மண் கில் ஒரு நாள் போட்டிகளை தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் சதத்தை பதிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது . இந்நிலையில் சுப்மண் கில் தனது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது வர்ணனையில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது .

அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் “,ராகுல் டிராவிட் சச்சினுக்கு செய்தது போல் சுப்மண் கில்லுக்கும் செய்துவிடக் கூடாது”என்று கூறினார் .

- Advertisement -

இது குறித்து பேசிய கைஃப் “2004 ஆம் ஆண்டு இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 675 ரன்கள் 5 விக்கெட் களை இழந்து ஆடிக் கொண்டிருந்தது . அப்போது யுவராஜ் சிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் களத்தில் ஆடிக் கொண்டிருந்தனர்” .

“அந்தப் போட்டியில் யுவராஜ் சிங் தனது அரை சதத்தை நிறைவு செய்தவுடன் அப்போது கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் டிக்ளேர் செய்தார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் 194 ரண்களில் களத்தில் இருந்தார் அப்போது ராகுல் டிராவிட் டிக்ளர் செய்தது சிறிது மன வருத்தத்தை ஏற்படுத்தியது . இன்னும் கொஞ்சம் நேரம் கொடுத்திருந்தால் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் மண்ணில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்திருப்பார் . அந்த முடிவானது அணிக்காக எடுக்கப்பட்டாலும் ஒரு சிறிய மன வருத்தத்தை கொடுத்தது” என்று கூறினார் கைஃப்.

இது குறித்து மேலும் பேசிய அவர்” தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் எந்த ஒரு வீரரும் தங்களது 90களில் இருக்கும் பொழுது ஆட்டத்தை டிக்ளேர் செய்ய மாட்டார் என்று தான் நம்புவதாக”தெரிவித்தார். மேலும் “இதை தான் ராகுல் டிராவிட்டிடம் ஒரு கோரிக்கையாக வைப்பதாகவும் தெரிவித்தார். அணியின் நலன் முக்கியமாக பார்க்கப்பட்டாலும் ஒரு வீரர் அவரது சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும்போது அவருக்கு அதை பூர்த்தி செய்ய கால அவகாசம் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்” என்று தெரிவித்தார் .

சச்சினும் இதைப் பற்றி தான் எழுதிய புத்தகத்தில் “அந்தப் போட்டியில் டிக்ளர் செய்தது அணியின் வீரராக தனக்கு எந்த வருத்தமும் இல்லை . ஆனால் எனது தனிப்பட்ட முறையில் அந்த நொடி நான் தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தேன்” என்று தெரிவித்திருந்தார் .