“என்ன வேணா செய்ங்க சோசியல் மீடியா வராதிங்க.. நாடே கொந்தளிச்சு இருக்கு!” – பாகிஸ்தான் வீரர்களுக்கு ரமீஸ் ராஜா எச்சரிக்கை!

0
6341
Babar

நடப்பு ஆசியக்கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, அந்த அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்து இருக்கிறது!

இந்த போட்டியின் வெற்றி என்பது இரண்டு விதங்களில் பார்க்கப்படுவதாக உள்ளது. ஒன்று இந்தியா ஆசியக்கோப்பைக்கு வருவதற்கு முன்பாக மிகவும் குழப்பமான நிலையில் இருந்த ஒரு அணியாக இருந்தது. இந்திய அணி செட்டில் செய்யப்படவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி முழுவதுமாக செட்டில் செய்யப்பட்ட ஒரு அணியாக இருந்தது. யார் விளையாடுவார்கள்? யாருக்கு என்ன இடம்? என்பது குறித்து தெளிவு துல்லியமாக இருந்தது. அவர்கள் அனைத்து துறைகளிலும் சரியாக இருந்தார்கள். மேலும் அந்தச் சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருந்தார்கள்.

இப்படியான நிலையில் இரண்டு அணிகளும் சந்தித்துக் கொண்ட முதல் போட்டியிலும் ஓரளவுக்கு பாகிஸ்தான் கையே பந்துவீச்சில் ஓங்கி இருந்தது. இதனால் பாகிஸ்தானின் நம்பிக்கை இன்னும் அதிகரித்தது.

இதற்கெல்லாம் தலைகீழாக இரண்டாவது சுற்றில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், எழுச்சி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியை மொத்தமாக வீழ்த்தி விட்டது. அது எப்படி நடந்தது? என்று இப்பொழுது வரை பாகிஸ்தானளிக்கும் புரியவில்லை. இதன் காரணமாக அவர்கள் நம்பிக்கை குறைவாகவும் குழப்பத்திலும் இருக்கிறார்கள். தற்சமயம் இலங்கைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டிக்கு மட்டும் ஐந்து வீரர்களை மாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா கூறுகையில்
“இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. இதை வைத்து பாகிஸ்தான் பலம் பெறுமா? இல்லை பெற்ற தோல்வியால் நம்பிக்கை இல்லாமல் இருப்பார்களா? என்று பார்க்க வேண்டும்.

இவர்களுக்கு சிறிது காலம் ஓய்வு தேவை. இவர்கள் மனதளவில் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். மேலும் இவர்களுக்கு நல்ல இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்திருக்கிறது. இவர்கள் வெற்றி தோல்வியை பற்றி இல்லாமல் பொதுவாக ஒன்று சேர்ந்து பேசிக் கொள்ள வேண்டும்.

யாருக்காவது சிறப்பு பயிற்சிகள் தேவை என்றால் செய்யலாம். இல்லை நீச்சல் குளங்களுக்கு செல்லலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் என்று எதையுமே தொடக்கூடாது. அதில் நல்லது எதுவுமே இருக்காது. ஏனென்றால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாடும் ஏமாற்றம் அடைந்திருக்கிறது.

இப்படிப்பட்ட தோல்விக்கு பிறகு அதற்காக யாரும் யாரையும் நோக்கி விரல் நீட்டிக் கொண்டிருக்கக் கூடாது. இப்படியான ஒரு தோல்வி இந்தியாவுக்கு எதிராக வந்திருக்கக் கூடாது. பாபர் அசாம் அணியை நன்றாக ஒருங்கிணைத்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது இலங்கை மோதலுக்கு முன்னால் பாபர் அசாம் செய்ய வேண்டியது அணிக்குள் ஒரு உற்சாகத்தை கொண்டு வந்து வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!