360 டிகிரி வேண்டாம்; 180 டிகிரி கூட இல்லனா எப்படி? பிரபல அணியின் பேட்டிங் பயிற்சியாளரை கலாய்த்து தள்ளிய வாசிம் அக்ரம்?

0
4151
Wasim Akram

இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி ஜெயித்தது. அடுத்த மூன்று ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி ஜெயித்தது. ஆறாவது போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணி ஜெயிக்க தொடர் தற்போது 3-3 என சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று தொடர் யாருக்கு என்று முடிவு செய்யும் கடைசி ஏழாவது போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்க இருக்கிறது!

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத், ஹைதர் அலி, உஸ்மான் காதிர், ஆமீர் ஜமால் ஆகியோர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் மிடில் வரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. கிசான் தோற்ற இரண்டாவது போட்டியில் ஷான் மசூத் மட்டும் குறிப்பிடும்படி ஒரு அரை சதம் அடித்தார். ஆனால் மற்ற அந்த போட்டிகளிலும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் குறிப்பிடும்படியான ஒரு ஆட்டத்தை ஆடவே இல்லை. பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான முஹம்மது ரிஸ்வான் இந்த போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள் அடித்தார். கேப்டன் பாபர் ஆசம் 6 போட்டியில் ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசையை எடுத்துக்கொண்டால் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான முஹம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் இருவரும் விக்கெட் விடாமல் நின்று விளையாடினால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு நல்ல ஸ்கோர் வருகிறது. இவர்களில் ஒருவர் ஆட்டமிழந்து விட்டாலும், இன்னொருவர் நின்று விளையாட, அடுத்து வரக்கூடிய எந்த வீரரும் சரியான ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மேலும் பாகிஸ்தானில் எந்த ஒரு பேட்ஸ்மேன்களிடமும் நவீன கிரிக்கெட் ஷாட்கள் கிடையாது. அவர்கள் வழக்கமான கிரிக்கெட் ஷாட்களைத்தான் விளையாடுகிறார்கள்.

தற்போது இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் ஒரு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அணியில் பேட்டிங் பயிற்சியாளர் முகமது யூசுப் இடம் மிகவும் நகைச்சுவையாக அதே சமயத்தில், இந்தக் குறையை கடுமையாக சுட்டிக்காட்டி பேசினார்.

வாசிம் அக்ரம் இதுகுறித்து முகமது யூசுப் இடம் தெரிவித்தது ; ” இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டெக்கட் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீச வரும்பொழுது, அவர்களை நிலைக்க விடுவதில்லை. அவர் எல்லா இடங்களிலும் ஷாட்கள் ஆடுகிறார். நான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினால், எனக்கு பாகிஸ்தான் வீரர்கள் எங்கு அடிப்பார்கள் என்று நன்றாகவே தெரியும். அவர்கள் ஷாட்களில் பன்முகத் திறமை கொண்டவர்கள் இல்லை. ஒருவர் கூட வழக்கத்திற்கு மாறான ஷாட்களை ஆடுவதில்லை ” என்று தெரிவித்தார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்து பேசிய பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளர் முகமது யூசுப் ” நான் மனப்பூர்வமாக இதற்கு முயற்சி செய்கிறேன். இதுகுறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் சக்லைன் அவர்களிடமும் பேசுவேன். பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் வலையில் பயிற்சி செய்யும்பொழுது, நான் வலைக்குப் பின்னாலிருந்து, சுழற்பந்துவீச்சில் எப்படி வித்தியாசமான ஷாட்கள் ஆடவேண்டும் என்று சொல்கிறேன். ஆனால் பயிற்சியிலிருந்து ஆட்டத்திற்குள் அவை எல்லாம் வர வேண்டும் ஆனால் வருவதில்லை. நவீன கிரிக்கெட் என்பது எல்லா பந்துகளிலும் பவுண்டரி அடிக்க வேண்டும், முடியாதபோது சிங்கிள் எடுக்க வேண்டும் என்பதுதான். இதை வீரர்களும் அறிந்திருக்கிறார்கள் ” என்று கூறினார்!