விராட் கோலி கூட கம்பேர் பண்ணாதீங்க.. இவரு ஜீரோ – முன்னாள் பாகிஸ்தான் வீரர் சாடல்!

0
2626

இனி விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடாதீர்கள் என கருத்து தெரிவித்துள்ளார் டேனிஷ் கனேரியா.

கிரிக்கெட் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நன்றாக விளையாடும் இளம் வீரர்களை அதற்கு முன் சாதித்த ஜாம்பவான்கள் உடன் ஒப்பிடுவது வழக்கம். கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கருடன் இளம் வயதில் தொடர்ந்து சாதித்து வந்த விராத் கோலி ஒப்பிட்டு பேசப்பட்டார்.

தற்சமயம் விராட் கோலியின் சாதனைகளுடன் ஒப்பிட்டு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசப்பட்டு வருகிறார். விராட் கோலியின் பல சாதனைகளையும் பாபர் அசாம் முறியடித்து தனது காலை பதித்து வருவது கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்து வருகிறது.

சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்கு டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் பாபர் அசாம், கேப்டன் பொறுப்பில் சரிவர செயல்படவில்லை. தொடர்ந்து பல தோல்விகளையும் சந்தித்து வருவதால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் இனி விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிடுவது முற்றிலுமாக சரியற்றது. பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் பூஜ்யம் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் டேனிஷ் கனேரியா. முன்னாள் பாகிஸ்தான் வீரர் பேசியதாவது:

“பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர் மிகப் பெரிய வீரர்கள். அவர்களுக்கு இணையான வீரர்கள் பாகிஸ்தானில் இல்லை. அவர்களுடன் ஒப்பிடுவதற்கு ஏதேனும் செய்திருக்க வேண்டும். கேப்டனாக, பாபர் அசாம் ஒரு பூஜ்யம். கேப்டன் பொறுப்பில் எதையும் சாதித்தது இல்லை. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்று விளையாடுவதற்கு தகுதியற்றவர்.

பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு ஆளுமை மிக்க வீரரை எதிர்த்து விளையாட வேண்டும் என்றால் அதற்கான பல்வேறு திட்டங்கள் கையில் இருக்க வேண்டும். ஒன்றுமே இல்லாமல் களம் இறங்கி தற்போது மூன்று போட்டிகளையும் இழந்துவிட்டனர். இது பாகிஸ்தான் டெஸ்ட் வரலாற்றில் மிகப் பெரிய கருப்பு புள்ளியாக இருக்கும்.” என்றார.