தோல்விக்கு காரணம் கேட்ச் மிஸ் பண்ணியது இல்லை, இவங்க ரெண்டு பேரும் தான் – ரோகித் சர்மா கொடுத்த ஓபன் டாக்!

0
324
Rohit sharma

இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் என்று ரோகித் சர்மா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மிகச்சிறப்பாக ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. அதன்பிறகு விராட் கோலி நன்றாக விளையாட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். அரைசதம் கடந்த விராத் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்திருந்தது.

- Advertisement -

இந்த மைதானத்தில் 180 ரன்கள் கடப்பது சற்று கடினம் என்றாலும் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர் ரிஸ்வான் சிறப்பாக விளையாடினார். பாபர் அசாம் 14 ரன்களுக்கு ஆட்டம் இழந்த பிறகு, அடுத்து வந்த பக்கர் ஜமான் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் இருவரும் இந்தியாவின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டனர். ஆட்டம் மெல்ல மெல்ல இந்திய அணியின் கையில் இருந்து நழுவியது. நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ரிஸ்வான் 71 ரன்கள் அடித்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற ஏழு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோது ஆசிப் அலி ஒரு பவுண்டரி அடித்தார். அதன் பிறகு வந்த வீரர் இரண்டு ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா:

இது மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டி. பாகிஸ்தான் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். முகமது ரிஸ்வான் மற்றும் நவாஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்த விதம் துவக்கத்தில் நாங்கள் எளிதாக எடுத்துக் கொண்டோம். ஆனால் அது அவர்களுக்கு அது நன்றாக அமைந்தது. அவர்கள் இருவரும் நன்றாக விளையாடிய பிறகும் நாங்கள் எந்தவித அழுத்தத்திலும் இல்லை. சரியான தருணத்திற்கு திரும்புவோம் என்று நினைத்திருந்தேன். 180 ரன்கள் அடித்ததால் நிச்சயம் இதனை கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்திருந்தேன். போட்டியில் ஒரு சில தவறுகள் நடக்கும். அதற்காக அனைத்தையும் அந்த தவறின் மீது குறை சொல்லக்கூடாது.

- Advertisement -

இன்றைய போட்டியில் விராட் கோலி விளையாடுவது தான் அவரது அனுபவத்தை காட்டியது. மற்ற வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டம் இழந்த போது யாராவது ஒருவர் களத்தில் நிலைத்து நின்று விளையாட வேண்டும். அந்த செயலை அவர் நன்றாக செய்தார். இந்த போட்டியில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் நன்றாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். தவறான தருணத்தில் அவர்கள் ஆட்டம் இழந்தது முக்கியமானதாக பார்க்கிறேன். வீரர்கள் அனைவரும் எந்தவித அழுத்தமும் இன்றி திறந்த மனதோடு எதையும் அணுக வேண்டும். இப்பொழுது நிறைய கற்றுக்கொண்டு மனதளவில் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும் என்பதை வீரர்களும் நானும் உணர வேண்டும். இந்திய வீரர்கள் உறுதியானவர்கள் அடுத்த போட்டிகளில் சரி செய்து கொள்வார்கள் என்றார்.