சென்னை அணியில் சாம் கரனுக்கு பதிலாக விளையாடப் போகும் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் இவர்தான், உற்சாகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

0
171
Sam Curran and Dominic Drakes

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றில் தகுதி பெற்று நல்ல நிலையில் இருக்கும் பொழுது, அதனுடைய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி நேற்று வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் ஆல்ரவுண்டர் வீரர் சாம் கரன் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியதாக அறிக்கை வெளியானது. மேலும் அவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக பல நாட்கள் எடுத்துக் கொள்ளவுள்ள நிலையில், உலகக் கோப்பை டி20 தொடரில் அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாட போவதில்லை என்கிற செய்துயும் கூடுதலாக உறுதியானது.

முக்கியமான கட்டத்தில் ஒரு ஓவர்சீஸ் ஆல்ரவுண்டர் இல்லாத காரணத்தினால் சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் ஒரு பக்கம் அச்சத்துடன் இருந்து வந்தனர். தற்பொழுது அவர்களின் அச்சத்தைப் போக்கும் விதத்தில் ஒரு மகிழ்ச்சி செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது.

- Advertisement -

சாம் கரனுக்கு பதிலாக சென்னை அணியில் விளையாட போகும் அந்த வீரர்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக பார்படோஸ்ஸை சேர்ந்த 23 வயதான ஆல்ரவுண்டர் வீரர் டொமினிக் ட்ரேக்ஸ் விளையாடி வந்தார். இவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த முடிந்த கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணியில் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக அந்த அணிக்காக இறுதிப்போட்டியில் 24 பந்துகளில் 41 ரன்கள் குவித்து, அந்த அணி இறுதி போட்டியில் வெற்றி பெற மிக முக்கிய காரணமாக விளங்கினார்.

அதிரடியாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யக்கூடிய இவர் தற்பொழுது சாம் கரனுக்கு மாற்று வீரராக விளையாட போகிறார் என்று தெரியவந்துள்ளது. பிசிசிஐ சென்னை அணி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று மாற்று வீரரை தேர்வு செய்து கொள்ளுமாறு அனுமதி அளித்துருந்தது. அதன் அடிப்படையில் தற்போது இந்த வீரரை சென்னை அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்கிறது.

நாளை நடக்க இருக்கின்ற ஆட்டத்தில் இவர் விளையாட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இவரது ஆட்டத்தை காண சென்னை ரசிகர்கள் ஒரு பக்கம் தற்போதே ஆவலுடன் இருக்கின்றனர்.

- Advertisement -

சென்னை அணிக்கு எப்பொழுதும் என் சப்போர்ட் இருந்து கொண்டே இருக்கும்

காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய சாம் கரன் தற்போது சென்னை அணி ரசிகர்களுக்கு ஒரு சில விஷயங்களை கூறியிருக்கிறார். முக்கியமான கட்டத்தில் காயம் காரணமாக வெளியேறுவது எனக்கு வருத்தமாக உள்ளது. இருப்பினும் தொடரில் நல்ல நிலையில் தற்போது சென்னை அணி உள்ளது. வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.அவர்களுடன் நேரத்தை செலவிட்டது எனக்கு மகிழ்ச்சியை தந்தது என்றும் கூறினார். சென்னை அணிக்காக எனது ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்றும் சாம் கரன் கூறியுள்ளார்.

காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் உலக கோப்பை டி20 தொடர் என அடுத்தடுத்து இரண்டு பெரிய தொடர்களில் இடம்பெறாமல் தான் இப்படி வெளியேறியதை எதிர்பார்க்காத ஒன்று என்று வருத்தத்துடன் அவர் கூறினார்.