ஆட்டத்தின் குறுக்கே புகுந்த வளர்ப்பு நாய் – பந்தை தூக்கிக்கொண்டு ஓடியதால் பரபரப்பு

0
120
Dog interrupts the Play

பரபரப்பாக ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போது ரசிகர்கள் யாராவது மைதானத்திற்குள் ஓடிவருவது கிரிக்கெட்டில் இயல்புதான் ஏற்கனவே பலமுறை பல்வேறு ரசிகர்கள் ஆட்டத்தில் குறுக்கீட்டு இதுபோன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.மனிதர்கள் மட்டுமல்லாது சில நேரங்களில் பறவைகள் நாய்கள் என்று பல்வேறு விதமான விலங்குகளும் கூட ஆட்டத்தை குறிப்பிட்டு நிறுத்தியுள்ளன. ஒரு முறை ரஞ்சி ஆட்டத்தில் பாம்பு ஒன்று மைதானத்திற்கு நுழைந்து ஆட்டத்தை சிறிது நேரம் பாதித்தது.

தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட இந்திய அணியின் ரசிகர் என்று சொல்லிக்கொண்ட ஜார்வோ என்னும் நபர் மூன்று முறை மைதானத்துக்குள் நுழைந்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்வாறு நுழைவது குற்றமாக கருதப் பட்டாலும் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஜார்வோ நான்காவது டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் நுழைந்து வீரரை தாக்க முற்பட்டார் என்றும் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

மனிதர்களாக இருந்தால் தண்டிக்கலாம். ஆனால் அயர்லாந்து நாட்டில் நடந்த பெண்கள் டி20 போட்டி ஒன்றில் ஒரு நாய் ஒன்று ஆட்டத்தின்போது குறுக்கிட்டது. பெம்ப்ரோக் மற்றும் பிரடி கிரிகெட் கிளப் என்ற இரு அணிகளுக்கு எதிராக ஆட்டம் நடைபெற்றது. தேர்ட் மேன் திசையில் பந்தை அடித்து பேட்டிங் அணி 2 ரன்கள் ஓட முற்பட்டது. அதை பில்டிங் செய்து விக்கெட் கீப்பர் இடம் பந்தை எடுத்து வீசினார் ஒரு ஃபீல்டர்.

விக்கெட் கீப்பர் ரன் அவுட் ஆக்க பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார். ஆனால் பந்து ஸ்டம்ப்புகளை தவிர்க்கவில்லை. மாறாக அது மைதானத்தின் ஒரு பக்கத்தில் சென்று விட அப்போது திடீரென்று களத்திற்குள் புகுந்த நாய் ஒன்று அந்தப் பந்தை வாயில் கவ்விக்கொண்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தது. சிலர் நாயை விரட்டி சென்றாலும் நாயை பிடிக்க முடியவில்லை.

கடைசியாக அந்த நாய் ஓடிவந்து பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு வீராங்கணையிடம் பந்தை கொடுத்துவிட்டது. ஆட்டத்தில் சிறிது நேரம் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்திய இந்த நாயின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.