உள்நாட்டுப் போட்டி விளையாட கசக்குதா? – இளம் வீரரை தாக்கிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்!

0
162
Arsdeep

இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் நேற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் மகாராஷ்டிரா மாநில புனே நகரில் இந்திய அணி மோதியது.

இந்தப் போட்டியில் பந்துவீச்சின் போதும் பேட்டிங் செய்த போதும் பவர் பிளேவின் இந்திய அணி பல தவறுகளை செய்து தோல்வியை தழுவியது. அதுவும் அடிப்படை விஷயங்களில் தவறு செய்ததால் இந்த தோல்வி ஏற்பட்டது. தொடரை இரண்டாவது போட்டியோடு வென்று இருக்க வேண்டிய வாய்ப்பை இந்திய அணி எடுத்துக் கொண்டது.

முதலாவதாக இந்திய அணி முதலில் பந்து வீசியபோது பவர் பிளேவில் இரண்டாவது ஓவரை இந்திய அணியின் இடது கை இளம் வேகப் பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் அவர் தொடர்ந்து மூன்று நோபால்களை வீசி ரன்களைத் தந்து இலங்கை தொடக்க ஆட்டக்காரர்களுக்கு இருந்த அழுத்தத்தை எடுத்து விட்டார். இதேபோல் 19ஆவது ஓவரில் மேலும் இரண்டு நோபால்களை வீசினார். இதில் ஒரு பந்தில் அவருக்கு அதிரடியாக விளையாடிய சனகாவின் விக்கட்டும் கிடைத்தது. இரண்டு ஓவர்கள் வீசி அவர் விக்கெட் எடுக்காமல் 37 ரன்கள் தந்தார்.

இது குறிப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரிம் பேசும் பொழுது “அர்ஸ்தீப் சிங் இந்த ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் பஞ்சாப் அணிக்காக ஏன் விளையாடவில்லை. இப்படி உள்நாட்டு ஆட்ட பயிற்சிகள் இல்லாமல் போய் தான் இப்படி தவறுகள் நடக்கிறது. அதே சமயத்தில் இவர்கள் அனுபவமற்றவர்கள். இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தருவதும் முக்கியமானது!” என்று கூறியுள்ளார்!

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரிதிந்தர் சிங் சோதி கூறுகையில் ” சச்சின் மற்றும் ஜவஹல் ஸ்ரீநாத் போன்ற மிகப்பெரிய வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடிய போதும் உள்நாட்டுப் போட்டிகளில் மும்பை மற்றும் கர்நாடக அணிக்காகவும் விளையாடினார்கள். இதை இளம் வீரர்கள் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்!