“நம்பர் 4ல பேட்டிங் இறங்க உனக்கு ஓகே வா?” என கேள்வி எழுப்பிய ரோகித் சர்மா – பதில் கொடுத்த இஷான் கிஷன் !

0
3892

நான்காவது இடத்தில் களமிறங்க உனக்கு பிடித்திருக்கிறதா? என கேள்வி எழுப்பிய ரோகித் சர்மாவிற்கு ஈசான் கிஷன் சிறப்பான பதில் கொடுத்திருக்கிறார்.

நியூசிலாந்து அணியுடன் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் சொந்த காரணங்களுக்காகவும், ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை.

ஆகையால் சுரேஷ்குமார் யாதவ், இசான் கிஷன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கியதால் இஷான் கிஷன் முதல் ஒருநாள் போட்டியில் நான்காவது வீரராக களம் இறங்கினார்.

சுப்மன் கில் 149 பந்துகள் 208 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தார். அதே நேரம் இஷான் கிஷன் 4வது இடத்தில் இறங்கி, வெறும் ஐந்து ரன்களுக்கு அவுட் ஆகினார். இறுதியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு, முதல் முறையாக இரட்டை சதம் அடித்ததற்காக ஏற்கனவே இரட்டை சதம் அடித்திருந்த இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சுப்மன் கில்லுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது பேசிய ரோகித் சர்மா, “கிஷான் கிஷன் இரட்டை சதம் அடித்த பிறகு தொடர்ச்சியாக மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை.” என பேசினார். அதற்கு நல்ல பதில் கொடுத்த இஷான் கிஷன், “நீங்கள் தான் கேப்டன். நீங்கள் கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் அல்லவா!.” என்றார்.

அதன் பிறகு, “நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய உனக்கு பிடித்திருக்கிறதா?.” என ரோகித் சர்மா கேள்வி எழுப்பினார். “நிச்சயம் பிடித்திருக்கிறது. இந்திய அணியை பொருத்தவரை பிடிக்காதது என்று எதுவும் இல்லை. அணிக்காக விளையாடுகிறோம். எந்த இடத்தில் களமிறங்கினாலும் பங்களிப்பை கொடுக்க வேண்டும். அவ்வளவு தான் எனது திட்டம்.” என்று சிறப்பாக பதில் கொடுத்தார்.