“ரசல் மற்றும் ஏபிடி இவர்களை விட சூரியகுமார் யாதவ் தான் பெஸ்ட் ஏன் தெரியுமா”?- அஜய் ஜடேஜா பதில்

0
776
Sky

இந்திய மற்றும் இலங்கையணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ராஜ்காட்டில் நடந்தது. இதில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் துணை கேப்டன் சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக ஆடி டி20 கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார் .

நேற்று இவர் ஆட்டம் ஆனது மிகச் சிறப்பாக இருந்தது . வழக்கம் போல் தனது அதிரடி மற்றும் 360 டிகிரியில் சுழன்று ஆடிய சூரியகுமார் 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார் . இதில் ஒன்பது சிக்ஸர்களும் ஏழு பவுண்டரிகளும் அடங்கும்.இவரது ஸ்ட்ரைக் ரேட் 219.61 ஆகும் ..

- Advertisement -

மைதானத்தின் எந்த பகுதிக்கும் பந்துகளை அடிக்கும் திறமை சூரிய குமார் யாதவிருக்கு இருக்கிறது. இதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும் 360 டிகிரி சூப்பர் ஸ்டார் ஆன ஏபி டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பம் முதலிலேயே ஏபி.டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் கூறியுள்ள அவர் ஏபி.டிவில்லியர்ஸ் தான் முதல் அதன் பிறகு தான் நான் என்று பேட்டி அளித்து இருந்தார் .

நேற்றைய ஆட்டத்திற்குப் பின் பேசிய அஜய் ஜடேஜா சூர்யா குமார் யாதவிடம் ஏபி.டிவில்லியர்ஸ் போன்று மிகப்பெரிய பவர் இல்லை. ஆனாலும் அவரால் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் தொடர்ச்சியாக ஆட முடிகிறது அதுதான் சூரியகுமார் யாதவ் ஸ்பெஷல் என்று கூறி இருக்கிறார் .

ஆண்ட்ரூ ரசல் மற்றும் ஏபி.டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் பவர் பிளேயர்கள் டிவில்லியர்ஸ் 360 பிளேயர் ஆக இருந்தாலும் அவரால் அதிகப்படியான சக்தியை ஜெனரேட் செய்ய முடியும் . ஆனால் சூரியகுமார் யாதவ் அப்படியான பவர் பிளேயர் இல்லை பெரும்பாலும் டைமிங் மற்றும் கேப் ஆகிய இரண்டையும் கணித்து ஆடக்கூடிய ஒரு வீரர் . அதே நேரத்தில் அவர் டிவிலியர்ஸ் மற்றும் ரசல் போன்று அதிரடியாக ஆடுவது தான் அவரது ஆட்டத்தின் தனிச்சிறப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் பவர் பிளேயர்களாக இருந்தாலும் அவர்களது கேரியர் ஸ்ட்ரைக் ரேட் சூரியகுமார் யாதவை விட குறைவாகவே இருக்கிறது . சூரியகுமார் யாதவ் மிகவும் அதிரடியாக ரன் குவிப்பதை போலவே தொடர்ச்சியாகவும் ரன்களை குவித்து வருகிறார் . மேலும் அவரது கேரியர் ஸ்ட்ரைக் ரேட் 180 க்கு மேல் உள்ளது . இது டிவில்லியர்ஸ் மற்றும் ஆன்று ரசல் ஆகியோரை விட அதிகமாகும் . இதனால்தான் சூரியகுமார் யாதவை அவர்கள் இருவரையும் விட சிறந்த t20 பேட்ஸ்மனாக மதிப்பிடுகிறேன் என்று கூறி முடித்தார் அஜய் ஜடேஜா.