“இந்தியாவுக்கு எதிரா பைனல்லையும் இதையே செய்யுங்க!” – ஆட்டநாயகன் குசால் மெண்டிஸ் வித்தியாச வேண்டுகோள்!

0
1661
Kushal

நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் இலங்கை அணி விளையாடி உள்ள ஐந்து போட்டிகளுமே, மிகவும் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக அவர்கள் ஐந்து போட்டியிலும் விளையாடி இருக்கிறார்கள்.

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக, வென்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்கின்ற முக்கியமான போட்டியிலும் அந்தப் பரபரப்பு தொடர்ந்தது.

- Advertisement -

42 ஓவர்களில் 252 ரன்களை துரத்திய இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து, கடைசி இரண்டு பந்துக்கு 6 ரன்கள் தேவை என்கின்ற நிலையில் இருந்து, பாகிஸ்தான் அணியை கடைசிப் கட்டத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் மூன்றாவது வீரராக களம் இறங்கிய இலங்கை வீரர் குசால் மெண்டிஸ், உலக தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் 87 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 91 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அவர் இருக்கும் வரை போட்டி மிக எளிதில் முடியும்படியே இருந்தது. ஆனால் அடுத்து வந்த கேப்டன் சனாக மற்றும் தனஞ்செய இருவரும் போட்டியை கடைசி ஓவருக்கு மாற்றி விட்டார்கள்.

நாளை மறுநாள் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதுவரை நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடர்களில் இந்த இரண்டு அணிகள்தான் பெரிய ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அது தற்பொழுதும் தொடர்கிறது.

- Advertisement -

நேற்று ஆட்டநாயகன் விருது பெற்ற குசால் மெண்டிஸ் கூறுகையில் “எனது ஆட்டத்திலும், இறுதிப் போட்டிக்கு வந்ததிலும் மகிழ்ச்சி. திடீரென இரண்டு விக்கெட்டுகள் இறுதியில் சரிந்ததால் நாங்கள் பதற்றம் அடைந்தோம். ஆனால் அசலங்கா வெல்ல வைப்பார் என்று நம்பினோம். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் இதை செய்துள்ளார்.

நாங்களும் நன்றாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன். இறுதிப் போட்டிக்கு வந்ததில் மகிழ்ச்சி. ஹசரங்கா, லகிரு குமாரா, சமீரா என மூன்று முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாத பொழுதும், இந்த இளம் யூனிட் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. எங்களை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி. இறுதிப் போட்டியிலும் இதே ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்!” என்று கேட்டிருக்கிறார்!