உலகக்கோப்பைக்கு இந்த இந்திய வீரரை கூட்டிக்கொண்டு போக வேண்டாம் – பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கருத்து

0
170
Salman butt

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துகொண்டிருக்கும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப்போட்டி வாய்ப்பில் இருந்து இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் சூப்பர் 4 சுற்றில் தோற்று வெளியேறி இருக்கிறது.

இந்த தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது இந்திய வேகப்பந்து வீச்சுதான். அணியில் மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருக்க அதில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆவேஸ் கான் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அது அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

இந்த அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் இருந்தார். அவர் பவர் பிளேவில் சுமாராக பந்து வீசினாலும் முக்கியமான நேரத்தில் இறுதிகட்டத்தில் வீசிய ஓவர்களில் ரன்னை விட்டுக் கொடுத்ததால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தான் அணியுடன் முக்கியமான நேரத்தில் 19 ரன்களை தந்தார் அதேபோல் இலங்கை அணியுடனான ஆட்டத்தில் நடந்தது. அதே சமயத்தில் இந்திய அணியின் கடைசி போட்டியான ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி திரும்ப வந்தார்.

தற்போது இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க இடதுகை ஆட்டக்காரர் சல்மான் பட் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது “அவர் டெத் ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுக்கிறார். பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுக்கிறார். போட்டி நடக்கும் இந்த இடத்தில் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகிறது. ஆனால் நல்ல அணிகளால் இந்த ஸ்விங்கை எளிதில் நிராகரிக்க முடியும். அவரது வேகப்பந்து வீச்சு கடினமாக இல்லை. ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் லைனில் விளையாடினார்கள். அவர்கள் பவர் ஹிட்டர்கள். அவர்களிடம் சரியான பேட்டிங் நுட்பம் இல்லை. அதனால்தான் அவர்கள் புவனேஸ்வர் குமாரிடம் விழுந்து விட்டார்கள் ” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “புவனேஷ்வர் குமாருக்கு பந்துவீச்சில் வேகம் இல்லை அதனால் அவர் இறுதி கட்ட ஓவர்களில் போராடுகிறார். அதனால்தான் அவரை அடிக்க பேட்ஸ்மேன்கள் பயப்படுவது இல்லை. நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு அவரின் தேர்வை நான் சரியான ஒன்றாக பார்க்கவில்லை என்று, யாரும் எதிர்பார்க்காத அதிரடியான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இதைப் பற்றி பேசி இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஒரு ஆட்டத்தில் முடிவுகளை வைத்துக்கொண்டு நாங்கள் வீரர்களை அணுகுவது இல்லை. அணிக்குள் மிகவும் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. சில ஆட்டங்களில் இப்படி அமையதான் செய்யும் அதற்காக வீரர்களை கைவிட முடியாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.