அவரால் எதுவும் செய்ய முடியாது அவரை நீக்கிவிடுங்கள் – ஆர்.பி.சிங் அதிரடி தாக்கு!

0
350
R. P. Singh

தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஒரு வித்தியாசமான கலவையில் விளையாடி வருகிறது. இது ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் முன்னாள் வீரர்களையும், எதிரணிகளையும் கூட ஒரு வித குழப்பத்திலேயே வைத்திருக்கிறது!

ஆசிய கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மூன்றே மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். பும்ரா இல்லாத நிலையில் முகமது சாமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் இந்திய அணி விளையாடும் துபாய் மைதானத்தில் வேகப்பந்து வீச்சு நன்றாக எடுபடுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள 3 வேகப்பந்து வீச்சாளர்களும் ஆடும் அணியில் இடம் பெற வேண்டி இருக்கிறது. யாராவது ஒருவர் காயம் அடைந்தால் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க வேண்டி வரும்.

- Advertisement -

இது ஒருபுறம் என்றால், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் போன்ற நல்ல பேட்டிங் டச்சில் இருக்கும் வீரர்கள் பென்ச் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் இழந்த பார்மை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலிக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் ரிஷப் பண்ட் அமர வைக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இடம்பெற்றார். ஆனால் அதற்கடுத்து ஹாங்காங் அணியுடனான போட்டியில் ரிஷப் பண்ட் அணிக்குள் அழைத்துவரப்பட்டார் தினேஷ் கார்த்திக்கும் அணியில் இடம் பெற்றார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு தரப்பட்ட பொழுது இன்னொரு ஆல்ரவுண்டர் ஆன தீபக் ஹூடா அணியில் வாய்ப்பை பெறவில்லை. இதெல்லாம் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்கிற கேள்வியை இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் அவரிடம் முன்வைக்கப்பட்டது. அவர் அணியில் இடம் பெற வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்.

- Advertisement -

அவர் கூறும் பொழுது ” தினேஷ் கார்த்திக் இல்லை கேஎல் ராகுல் இருவரில் ஒருவர் ஓய்வு எடுக்க வேண்டும். ரிஷப் பண்ட் ஆடும் அணியில் இடம்பெற வேண்டும். ரிஷப் பண்ட் விளையாட தகுதியானவர். அவர் ஒரு மேட்ச் வின்னர். அவர் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியை அவரால் அழைத்துச் செல்ல முடியும் என்று கூறினார் “

மேலும் அவரிடம் வெளியில் அமர வைக்க வேண்டியது தினேஷ் கார்த்திக்கா? கே எல் ராகுலா? என்று கேள்வி மேலும் நீட்டிக்கப்பட்ட பொழுது, ஆர் பி சிங் எந்த வித தயக்கமும் இல்லாமல் நேரடியாகவே தனது கருத்தை பலரும் அதிர்ச்சி அடையும் வண்ணம் வெளியில் வைத்தார்.

இந்தக் கேள்விக்கு அவர் பதில் கூறும் பொழுது ” கேஎல் ராகுல் அதிக வாக்குறுதியை காட்டவில்லை என்று நான் உணர்கிறேன். அவரது உடல் மொழியை பார்க்கும்பொழுது அவரால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிகிறது. அவர் காயத்திலிருந்து அணிக்குள் வருவதால் அவர் தயாராவதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. போட்டி சூழலை அவர் உணர்வதற்கு காலம் எடுக்கிறது இது கவலையாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.