டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட 6 நட்சத்திர வீரர்கள்

0
2565
KL Rahul Test Cricket

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சதமடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒரு டி20 போட்டியில் சாதாரணமாக சதம் அடிக்கும் வீரர் கூட டெஸ்ட் போட்டிகளில் அரை சதம் கடந்தாலே அவருக்கு அது பெரிய வெற்றிதான். அந்த வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் கூட இரட்டைசதம், முச்சதம், 4 சதம் என தனது முழு திறனை நிரூபித்து அவ்வப்போது ரசிகர்களுக்கு இமாலய சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகின்றனர் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள். ஆனாலும், சிலமுறை ஒரு ரன் வித்தியாசத்தில் இத்தகைய பெரும் சாதனையை படைக்க தவறிவிடுகின்றனர்.

அவ்வாறு, ஒரே இன்னிங்சில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் தவறவிட்ட நட்சத்திர வீரர்களை பற்றிய தொகுப்பு இது.

- Advertisement -

1. முகமது அசாருதீன்

1986ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் 199 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவருக்கு முன்னரே பாகிஸ்தான் அணியை சேர்ந்த நாசர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் இரட்டை சதத்தை கோட்டை விட்டார். மேலும், இந்த பாகிஸ்தான் வீரரே இத்தகைய பட்டியலை துவங்கி வைத்த வீரரும் கூட.

2. சனத் ஜெயசூர்யா

Sanath Jayasuriya Cricket

1996-ல் தனது முதலாவது உலகக் கோப்பை பட்டத்தை வென்ற இலங்கை அணி, அடுத்த ஆண்டே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. அப்போதைய நடப்பு சாம்பியனான இலங்கை அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரரான ஜெயசூர்யா, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 199 ரன்களை மட்டுமே குவித்து இந்த பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக்கொண்டார்.

3. ஸ்டீவ் வாக்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தங்களது அபார திறமையால் ரசிகர்களின் மனதை வென்ற இரட்டையர்களில் ஒருவரான ஸ்டீவ் வாக், 1999-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலாவது இன்னிங்சிலேயே இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை வீணடித்து பெவிலியன் திரும்பினார். மேலும், இந்த பட்டியலில் இணைந்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்னும் மோசமான சாதனையையும் படைத்தார். இவருக்கு முன்னர், 1997-ஆம் ஆண்டு எலியட் என்னும் ஆஸ்திரேலிய வீரர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

- Advertisement -

4. ஸ்டீவ் ஸ்மித்

நவீனகால டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவானாக திகழும் கூடிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், கடந்த 2015ஆம் ஆண்டு இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார். ஸ்டீவ் வாக்கை போலவே, இவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் இத்தகைய மோசமான சாதனையை புரிய நேர்ந்தது.

5. கே.எல்.ராகுல்

கடந்த 201 6ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. அந்த சுற்றுப்பயணத்தின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கே.எல்.ராகுல் 199 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

6.பாப் டுபிளசிஸ்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பேரனுபவம் கொண்ட தென்ஆப்பிரிக்கா வீரரான டுபிளிசிஸ், கடந்தாண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஒரு ரன் வித்தியாசத்தில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டு இந்த பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்கிறார்.