தினேஷ் கார்த்திக் செய்த மிகப்பெரிய மிஸ்டேக் ; காப்பாற்றிய கிரிக்கெட் ரூல்; வீடியோ இணைப்பு!

0
3102
DK

டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்திருக்கிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கிறது.

இன்று தொடர் யாருக்கு என்று முடிவு செய்யும் இறுதிப்போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரிஷப் பண்ட் வெளியே அனுப்பப்பட்டு புவனேஸ்வர் குமார் உள்ளே வந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்காக துவக்கம் தர களத்திற்கு வந்த கேப்டன் ஆரோன் பின்ச் சீக்கிரத்தில் கிளம்ப, இன்னொரு ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் கேமரூன் கிரீன் இந்திய பந்து வீச்சை சிதைத்துவிட்டார். வெறும் இருபத்தி ஒரு பந்துகளை சந்தித்த அவர் 52 ரன்களை 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களோடு குவித்தார். 19 பந்தில் இவரது முதல் சர்வதேச டி20 அரைசதம் வந்தது. இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் அதிவேகமாக அரை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கடுத்து களத்திற்கு வந்த மேக்ஸ்வெல் வழக்கத்திற்கு மாறாக நிதானத்தோடு தடுமாற்றம் ஆகத்தான் விளையாடினார். சாகலின் பந்துவீச்சில் பின்புறமாய் தூக்கி அடித்துவிட்டு இரண்டு ரன்களுக்கு ஓடிய மேக்ஸ் விலை தினேஷ் கார்த்திக் ரன் அவுட் செய்தார்.

இந்த ரன் அவுட் களத்தில் இருந்தவர்களுக்கு குழப்பமாக இருந்தது. ஏனென்றால் தினேஷ் கார்த்திக் முதலில் கையால் ஸ்டெம்பை தட்டிவிட்டார். பின்பு கையில் வந்து பட்ட பந்து தானாக ஸ்டெம்பை மோத நடுவர் அவுட் தந்தார். 29.2 கிரிக்கெட் விதிப்படி ஒரு பக்கத்தில் ஸ்டெம்பின் பெயில்ஸ் நகராமல் இருந்து, அந்த பெயில்சை பந்தால் தட்டினால் ரன்அவுட் தரப்படும். இந்த விதியின் அடிப்படையில் தான் மேக்ஸ்வெல்லுக்கு ரன்அவுட் தரப்பட்டது. இதற்கான டுவிட்டர் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையடுத்து களத்திற்கு வந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் டிம் டேவிட் 21 பந்துகளில் 52 ரன்கள் குவித்து பிரமாதமாக தனது முதல் சர்வதேச டி20 அரை சதத்தை அடிக்க, 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 186 ரன்கள் குவித்தது. தற்போது களமிறங்கிய இந்திய அணி விளையாடி வருகிறது!