இந்தியா – இங்கிலாந்து பயிற்சி டி20 ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா இருந்தும் தினேஷ் கார்த்திக் தான் கேப்டன் ! காரணம் இதுதான்

0
410
Dinesh Karthik and Hardik Pandya

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் ஒரு டெஸ்ட், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இன்னொரு இந்திய அணி உருவாக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இரண்டு டி20 போட்டிகள் விளையாட அயர்லாந்திற்கு அனுப்பப்பட்டது. இந்த அணி அயர்லாந்து உடனான தொடரை வென்று, தற்போது இங்கிலாந்தில் டி20 பயிற்சி போட்டிகளை விளையாடி வருகிறது.

ரோகித் சர்மா கோவிட்டால் பாதிக்கப்பட, ஜஸ்பீரிட் பும்ரா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து உடன் ஒரு டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்தோட ரோகித் சர்மா தலைமையில் மோதுகிறது. இதற்காக இங்கிலாந்து கவுன்டி அணிகளான டெர்பிசைர், நார்த்தாம்டன்சைர் அணிகளோடு இரு டி20 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

- Advertisement -

இதன் முதல் பயிற்சி ஆட்டம் நேற்று டெர்பி கவுன்டி அணி மைதானத்தில் இரவு 11.30 மணிக்குத் துவங்கியது. இந்தப் போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமைத் தாங்குவார் என்று எல்லோரும் நினைத்திருக்க, ஆனால் அவருக்குப் பதிலாக இந்திய அணியை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வழி நடத்தினார். ஹர்திக் பாண்ட்யாவிற்கு இரு ஆட்டங்களிலும் இந்திய அணி நிர்வாகம் ஓய்வளித்திருக்கிறது.

நேற்று இங்கிலாந்து கவுன்டி அணியான டெர்பிசைர் அணியுடனான போட்டியில் டாஸை வென்ற இந்திய கேப்டன் பந்துவீச்சை முதலில் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் வாய்ப்பு பெற்றிருந்தார். காயம் குணமடைந்த ருதுராஜீம் அணிக்குத் திரும்பி இருந்தார்.

முதலில் பேட் செய்த டெர்பிசைர் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அர்ஷ்தீப் சிங் நான்கு ஓவர்கள் வீசி 29 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் நான்கு ஓவர்கள் வீசி 31 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அடுத்து 151 ரன்களை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், ருதுராஜ் துவக்கதர களமிறங்கினர். இருவரும் 38 மற்றும் 3 ரன்களில் வெளியேற, தீபக் ஹூடா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அடுத்து சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 36 ரன்கள், கேப்டன் தினேஷ் கார்த்திக் 7 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, 16.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற்றது!