தோனியை விட ரோகித் சர்மா கேப்டனாக சிறந்தவரா?.. 2 பேருக்கும் நடுவுல அந்த வித்தியாசம் இருக்கு – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
362
Rohit

இது அணி கடந்த வாரம் சனிக்கிழமை டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வென்று சாம்பியன் ஆனது. ரோகித் சர்மா தலைமையில் பட்டம் பெற்று 13 ஆண்டு காலம் உலகக்கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த நிலையில் தோனியை விட ரோகித் சர்மா சிறந்தவரா? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

இந்திய அணி முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கபில்தேவ் தலைமையில் வென்றது. இதற்கு அடுத்து இந்திய அணி 24 வருடங்கள் கழித்து மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரையும் அவரது தலைமையிலேயே கைப்பற்றியது.

- Advertisement -

பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரின் மூலமாக உலகக் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. ஆனாலும் இந்திய அணிக்கு எந்த விதமான ஐசிசி பட்டங்களும் வரவில்லை. இது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய அவமானமாக மாற இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய அழுத்தமாக உருவெடுத்தது. இப்படியான நிலையில்தான் ரோகித் சர்மா தலைமையில் உலகக் கோப்பையை வென்றது பெரிய நிகழ்வாக இந்திய கிரிக்கெட்டில் மாறியிருக்கிறது.

தோனி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இடையிலான வித்தியாசம் பற்றி பேசியிருக்கும் தினேஷ் கார்த்திக் “ரோகித் சர்மா மாறும் சூழ்நிலைகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு கேப்டன். தோனி அப்படிப்பட்டவர் கிடையாது. அவர் தனது உள்ளுணர்வின் அடிப்படையில் செயலாற்ற கூடியவர். மேலும் விராட் கோலி ஒரு நெருப்பு மாதிரியான கேப்டன். அவர் எப்பொழுதும் எதிரணியின் முகத்திற்கு நேராக இருக்க விரும்புவார்

ரோகித் சர்மா திட்டரீதியாக மிகவும் திறமையானவர். அவர் குறிப்பிட்ட நாளில் போட்டியில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் வினையாற்றுவார். ஆனால் மிக முக்கியமாக அவருடைய பெரிய திறமை என்னவென்றால், அவர் வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார். இதனால் தான் பல வீரர்கள் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அவர் எந்த வீரரையும் இதுவரையில் கைவிடவில்லை. இதன் காரணத்தால் ரோகித் சர்மா சிறந்தவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : உ.கோ வெற்றி கொண்டாட்டம்.. அர்ஸ்தீப் சிங் செய்த நெகிழ்ச்சியான காரியம்.. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்

தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் விளையாட இருக்கிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வர இருக்கிறது. எனவே இந்த இரண்டு ஐசிசி தொடர்களிலும் ரோகித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக தொடர்வது உறுதியென ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.