வேறு கிரகத்தில் இருந்து வந்தது போல் ஆடும் இந்த வீரருக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் – தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்

0
147
Dinesh Karthik

சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. எளிதாக இந்திய அணி வெற்றி பெறும் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி மூன்று போட்டிகளிலும் இந்திய அணியை தோற்கடித்தது. இந்தத் தொடரில் பெரிதாக இந்திய அணிக்கு சாதகமான விஷயங்கள் எதுவும் இல்லை என்றாலும் சூரியகுமார் 3-வது ஆட்டத்தில் விளையாடிய சிறப்பான இன்னிங்ஸ் பலராலும் போற்றப்பட்டது.

3-வது ஆட்டத்தில் மிகவும் அழுத்தம் நிறைந்த நேரத்தில் காலத்திற்குள் வந்த சூரியகுமார் சிறப்பாக விளையாடி 38 ரன்கள் எடுத்தார். மிகவும் கடினமான நேரம் என்றாலும் இத்தனை ரன்கள் எடுப்பதற்கு இவர் முப்பத்தி இரண்டு பந்துகள் மட்டுமே எடுத்துக் கொண்டார். இவரும் சஹாரும் இவ்வளவு சிறப்பாக விளையாடியும் இந்திய அணியால் ஆட்டத்தை வெல்ல முடியவில்லை. இருந்தாலும் சூரியகுமார் ஆடிய இந்த ஆட்டத்திற்கு பலரும் சிறப்பான பாராட்டுகளை வழங்கி வருகின்றனர்.

அப்படி இவரை வெகுவாகப் பாராட்டி உள்ளவர்களில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். அவர் பேசும்போது சூரியகுமார் வேற்றுக்கிரகவாசி போல விளையாடுவதாகவும், அவர் அடிக்கும் ஷாட்களும் அதை அவர் அடிக்கும் முறையும் மிகவும் எளிமையான ஆட்டம் போல ஆட்டத்தை தோன்ற வைப்பதாகவும் கூறியுள்ளார் அவர். ஆனால் எப்போதுமே அவர் அதிக அழுத்தம் நிறைந்த நேரத்தில்தான் களமிறக்க படுவதாகவும் அதனால் அவருக்கு அதிக வாய்ப்புகள் தர வேண்டும் என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் சாதிக்கும் அவர் இதே போலத்தான் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதாகவும் அவரைத் தொடர்ந்து இந்திய அணிக்கு ஐந்தாவது இடத்தில் வைக்க வேண்டும் என்றும் கார்த்திக் விருப்பம் தெரிவித்துள்ளார். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை இரண்டாவது வீரராக தக்க வைத்துள்ளது. கடந்த மூன்று தொடர்களாக மும்பை அணிக்கு சிறப்பாக செயல்பட்டதால் மும்பை அணி அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

பலமுறை சிறப்பான ஆட்டங்கள் விளையாடி மும்பை அணியை கரை சேர்த்துள்ளார் சூரியகுமார். அதேபோல இந்திய அணிக்கும் விளையாடினால் கூடிய விரைவில் உலகக்கோப்பை அணியில் சூரியகுமாரை காணலாம் என்று பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.