ரோகித் சர்மா அடிச்ச அசிங்கமான அரைசதம் இது.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான் – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

0
699
Rohit

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது முதல் ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்க நியூயார்க் நாசாவ் மைதானத்தில் விளையாடியது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா அரை சதம் அடிக்க இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது நியூயார்க் நாசாவ் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அந்த மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணி 100 ரன்களை தொடவில்லை.

- Advertisement -

நேற்றும் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு அடுத்து விளையாடிய இந்தியா அணிக்கு 37 பந்தில் ரோகித் சர்மா 52 ரன்கள் எடுத்தார். ஆனாலும் பந்தை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமாக இல்லை. சீரற்ற பவுன்ஸ் காரணமாக பந்து பேட்ஸ்மேன்களை தாக்கியது.

இதுகுறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் அசிங்கமான அரைசதங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். முக்கிய காரணமாக ஆடுகளம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு ஆடுகளத்தில் விளையாடி அரைசதம் அடித்தால் கூட நம்பிக்கை வருமா? ஏனென்றால் அதிர்ஷ்டத்திற்கு எதிராக பலமுறை போராட வேண்டிஇருக்கிறது. இதில் நன்றாக உணர மாட்டீர்கள். அணிக்காக சிறப்பாக செய்த திருப்தி மட்டுமே இருக்கும்.

ரோகித் சர்மா நிலைமையை எதிர்த்து போராடினார். மேலும் ஜோஸ்வா லிட்டில் பந்தில் அடித்த இரண்டு சிக்ஸர்கள் மட்டும் நம்பிக்கை கொடுக்கும். கடினமான ஆடுகளங்களில் அவர் தன்னை நம்பி விளையாடுவார். ஆனால் நேற்று அவருக்கு சிறப்பான இன்னிங்ஸ் அமைந்தது போலவே மீண்டும் இப்படியான ஆடுகளத்தில் அமையும் என்று அவர் நம்ப மாட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : 43 வயது.. 27 வருட கனவு.. டி20 உ.கோ-ல் உலக சாதனை படைத்த உகாண்டா வீரர்.. பவுலிங் புது ரெக்கார்ட்

நேற்று விராட் கோலி ஆட்டம் இழந்த முறை அவர் சீக்கிரத்தில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று நினைத்ததை காட்டுகிறது. அவர் இதே மனநிலையுடன் தொடர்ந்து இருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்து இரண்டாவது சுற்றில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் செல்லும் பொழுது அங்கு சிறந்த ஆடுகளங்கள் கிடைக்கும். எனவே விராட் கோலி பந்தை அடித்து விளையாடும் இதே மனநிலையில் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.