வங்கதேசம் ஒன்றும் கத்துக்குட்டி அணி கிடையாது.. எச்சரிக்கை தேவை – தினேஷ் கார்த்திக் கருத்து

0
87

இந்திய வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று டாக்காவில் காலை 11:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக் வங்கதேச அணி ஒரு காலத்தில் சிறிய அணியாக இருந்தது. ஆனால் தற்போது உலக கிரிக்கெட்டில் அவர்களும் ஒரு முக்கியமான அணியாக விளங்கி வருகிறார்கள். வங்கதேச அணியை இனியும் சாதாரண அணியாக கருதக்கூடாது.

- Advertisement -

அவர்கள் இந்தியாவை நிறைய ஆட்டங்களில் தோற்கடித்திருக்கிறார்கள் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.வங்கதேச வீரர்கள் வேகப்பந்து வீச்சு எப்படி விளையாட வேண்டும் என கற்றுக்கொண்டு சிறப்பாக ஆடுகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக அவர்கள் எப்போதெல்லாம் களமிறார்களோ அப்போது எல்லாம் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.இந்த தொடர் இந்திய அணி வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொடராக அமையும்.

ஏனென்றால் கே எல் ராகுல் நடு வரிசையில் எப்படி தன்னை மாற்றிக் கொள்கிறார் என்பதை பார்க்க வேண்டும். விராட் கோலி நல்ல பார்மில் இருக்கிறார். ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக எப்படி செயல்படுகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். இதேபோன்று ராகுல் திருப்பாதி, சபாஷ் அகமது ஆகியோர் இந்த தொடரில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதையும் பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன்.

வங்கதேச அணியின் பெரிய பலமே அவர்களுடைய ரசிகர்கள் தான். இந்தியா உலகத்தில் எங்கு விளையாடினாலும் இந்திய ரசிகர்கள் தான் மைதானத்தில் அதிக அளவில் இருப்பார்கள் .ஆனால் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும் போது மட்டும் தான் வங்கதேச ரசிகர்களும் சரிசமமாக மைதானத்தில் இருப்பார்கள். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வங்கதேச அணி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இந்தப் போட்டியை சோனி 3, சோனி 4, சோனி 5 ஆகிய தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். டாஸ் வென்று பந்துவீசிய அணியே அதிக போட்டிகளில் மிர்பூரில் வென்று இருக்கிறது.

- Advertisement -