தினேஷ் கார்த்திக் எனக்கு நல்ல தெரியும்.. அவன் பெரிய பினிஷர் இல்ல, இவங்கதான் உண்மையான பினிஷர்; கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் காட்டம்!

0
495

தினேஷ் கார்த்திக் பெரிய பினிஷர் எல்லாம் இல்லை என்று காட்டமாக பதில் அளித்துள்ளார் இந்திய அணியின் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் திறமையான வீரராக இருந்தாலும் இந்திய அணியில் முதன்மையான விக்கெட் கீப்பர்கள் வந்துவிட்டதால் அவருக்கு தற்காலிக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் பொறுப்பே கொடுக்கப்பட்டு வந்தது. இல்லையேல் இரண்டாம் தர இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றால் அந்த சமயத்தில் இவரை போன்ற வீரர்களை அணியில் எடுத்து சிறு அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட வைத்து வந்தனர்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் அவ்வப்போது அணியில இடம் பெறுவார், இல்லையேல் வெளியேற்றப்படுவார். இப்படி இந்திய அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி வந்தது. கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரை பயன்படுத்தி கீழ் வரிசையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்காக பல வெற்றிகளையும் பெற்றுத் தந்திருக்கிறார். குறிப்பாக டி20 போட்டிகளில் 15 ஓவர்களுக்கு மேல் களம் இறங்கி 30-40 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தி வெற்றிக்கு வித்திட்டு வந்தார். 

இதனை கவனித்த பிசிசிஐ, அவரை தற்போது டி20 அணியில் நிரந்தர இடம் கொடுத்து வைத்திருக்கிறது. பினிஷர் என்ற முறையிலும் அவரை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் கிடையாது. அவர் இறங்கி ரன்கள் அடிக்கிறார் அவ்வளவுதான் என கடுமையாக சாடி இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணியின் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அவர் கூறுகையில்,

“தினேஷ் கார்த்திக் நன்றாக விளையாடக்கூடியவன். 15 ஓவர்களுக்கு மேல் களமிறங்கி மளமளவென அதிக ரன்களை அடித்துக் கொடுத்து வருகிறான். அதற்காக ஃபினிஷர் என்று சொல்லிவிட முடியாது. பினிஷர் என்றால் தோனி போன்று, ஆரம்பத்தில் அதிக விக்கெட்டுகள் விழுந்துவிட்டால், நிதானமாக விளையாடி சரியான நேரத்தில் ரன்கள் அடித்து கடைசி வரை நின்று போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும். ஆனால் தினேஷ் கார்த்திக் அப்படி செய்வதில்லை. ஐந்து ஓவர்கள் பிடித்து 20-30 ரன்கள் அதிகமாக அடித்துக் கொடுக்கிறார் அவ்வளவுதான்.

- Advertisement -

என்னைப் பொருத்தவரை ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா, சில நேரங்களில் ஜடேஜா ஆகியோர் பினிஷர்கள் ரோகித் சர்மாவையும் இந்த இடத்தில் குறிப்பிடலாம். அவரும் பல போட்டிகளை வெற்றி பெற்று தந்திருக்கிறார்.” என தனது கருத்தில் குறிப்பிட்டு இருந்தார்.