எலிமினேட்டர் போட்டியில் ஐ.பி.எல் நடத்தை விதியை மீறியதால் தண்டிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் – காரணம் இதுதான்

0
256
Dinesh Karthik RCB

நடப்பு ஐ.பி.எல் தொடரில் ப்ளேஆப்ஸ் சுற்றுக்கான நான்கு அணிகளில் மூன்று அணிகள் எதுவென்பதில் பெரிய இழுபறியோ பரபரப்போ நிலவவில்லை. சென்னை, மும்பை அணிகள் மொத்தமாக இருபது ஆட்டங்களைத் தோற்றதால் இப்படியான சூழல் உருவானது. ஆனால் ப்ளேஆப்ஸ் சுற்றில் நான்காவது அணி யார் என்பது, லீக் போட்டிகளின் கடைசிப் போட்டிக்குப் முந்தைய போட்டியில்தான் தெரியவந்தது. இதில் பெங்களூர் டெல்லி அணிகளிடையே கடைசிவரை இழுபறி நிலையே இருந்தது. இறுதியாக மும்பையிடம் டெல்லி தோற்க, ப்ளேஆப்ஸ் சுற்றில் நான்காவது அணியாகப் பெங்களூர் அணி நுழைந்தது!

இந்த நிலையில் ப்ளேஆப்ஸ் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் கடந்த 25ஆம் தேதி கொல்கத்தாவில் லக்னோ அணியை எதிர்த்து பெங்களூர் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ரஜத் பாட்டியாவின் சதத்தால் இருபது ஓவர்களின் முடிவில் 207 ரன்களை குவித்தது. இந்த ஆட்டத்தில் ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக் ஜோடி 92 ரன்களை சேர்த்தது. இதில் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் 17வது ஓவரில் ரஜத் பட்டிதார் மூனு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகளை நொறுக்கி பெங்களூர் அணி 200 ரன்களை தாண்டுவதற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கினார். ஒருகட்டத்தில் 180 ரன்கள் என்ற நிலையிலிருந்த பெங்களூர் அணி இதற்குப் பிறகு 200 என்பதை தாண்டி 215 டூ 220 ரன்களை குவிக்கும் நிலைக்கும் சென்றது. ஆனால் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் இருந்தும் பெரிய ரன்கள் வரவில்லை. கடைசி ஓவரில் இரண்டு முறை ஸ்கூப் ஷாட்டை ஆட முயன்ற அவருக்கு பந்து பேட்டில் படவில்லை. இதனால் வெறுப்படைந்த அவர் பொதுவாய் ஆங்கிலத்தில் கத்தியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

இது இப்பொழுது அவருக்கு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது. அதாவது அப்போது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் இது ஐ.பி.எல் நடத்தை விதி 2.3 பிரிவின் கீழ் குற்றமாகும். இதை தினைஷ் கார்த்திக் அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். இதில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியானதாகும். அவர்கள் கூறுவதை இதில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் பினிசிங் மிக அற்புதமாக இருக்கிறது. இந்தத் தொடரில் மொத்தம் 15 போட்டிகளில் 64.80 என்ற ஆவ்ரேஜில் 187.28 ஸ்ட்ரைக் ரேட்டில் 324 ரன்களை குவித்திருக்கிறார். இதன் மூலம் செளத்ஆப்பிரிக்க டி20 தொடரில் இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -