ஒரே நபர் எப்படி இவ்விரு இடத்தில் இருக்க முடியும்? தினேஷ் கார்த்திக் பதிலடி

0
3275

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்து அடுத்த ஐந்து நாட்களில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆரம்பித்தது. இதனால் இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு, மட்டுமல்லாமல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கும் ஓய்வு வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , பயிற்சியாளர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வது குறித்து விமர்சனம் செய்தார். தான் ஓய்வெடுத்துக் கொள்வதில் நம்பிக்கை இல்லாதவன் என்றும், எனது அணியை அருகில் இருந்து பயிற்சியாளராக காண தான் விரும்புவேன் என்றும் ரவி சாஸ்திரி கூறினார்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசிய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், நியூசிலாந்து தொடர் வரும் 30ஆம் தேதி முடிவடைகிறது. அதே தினத்தில் மற்றொரு இந்திய அணி வங்கதேசத்துக்கு சென்று பயிற்சியை தொடங்க இருக்கிறது. நான் கேட்பதெல்லாம் ஒரே நபர், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடத்தில் எப்படி இருக்க முடியும். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2023 உலக கோப்பைக்கு பின் பயிற்சியாளர்களுக்கான ஒப்பந்தம் முடிவடைகிறது.

அப்போது டெஸ்ட் , ஒரு நாள் தொடருக்கு ஒரு பயிற்சியாளராகவும், டி20க்கு ஒரு பயிற்சியாளரும் என இரண்டு பயிற்சியாளர்களை நியமிப்பது குறித்து பிசிசிஐ யோசிக்க வேண்டும். ஏனென்றால் நாம் முன்பு போல் இல்லாமல் இப்போது அதிகமாக கிரிக்கெட் விளையாடுகிறோம். இதன் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு தொடர்கள் நடைபெறும் சூழலும் ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதனை கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு இரண்டு பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகும். இதே பாணியை தான் இங்கிலாந்து அணி பின்பற்றி வருகிறது . தற்போது வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலியாக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா விளையாட இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நம்மால் பங்கேற்க முடியும்.

இதனால் சீனியர் வீரர்கள் சில காலத்திற்கு டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் கவனம் செலுத்துவார்கள். டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதால் அதைப்பற்றி இப்போது கவலைப்பட தேவையில்லை என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.