இனி இந்த 2 பேருக்கு இடையே தான் கேப்டன் போட்டி.. தினேஷ் கார்த்திக் கருத்து

0
915

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ செய்துள்ளது. உதாரணத்திற்கு துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். ஒருநாள் அணியின் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக் கடந்த 12 மாதத்தில் இந்திய அணிக்கு நிறைய வீரர்கள் தலைமை தாங்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்திய அணி அதிக போட்டிகளில் விளையாடியது தான். ஷிகர் தவான், ரிஷப் பந்த், கே எல் ராகுல் ,பும்ரா கேப்டனாக சில காலம் இருந்தார்கள். ஆனால் தற்போது ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டும்தான் கேப்டன் பொறுப்புக்கு நேரடி போட்டியில் இருக்கிறார்கள்.

கே எல் ராகுல் கேப்டனாக ஓரளவுக்கு நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார். ஆனால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக ஐபிஎல் தொடர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு தான் எதிர்காலத்தில் கேப்டன் ஆக வாய்ப்பு இருக்கிறது.இப்போது உள்ள சூழ்நிலையில் ராகுல் கேப்டன் பந்தயத்திலிருந்து விலகி விட்டார்.
என எண்ணுகிறேன்.
அடுத்த 12 மாதத்தில் ரோகித் ஹர்திக் பாண்டியா கூட்டணி தான் இந்திய அணியை வழி நடத்த வாய்ப்பு இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் தற்போது இவர்கள்தான் மிகப்பெரிய வீரர்களாக இருக்கிறார்கள் என்று தினேஷ் கார்த்திக் கூறினார். இந்திய அணி கேப்டனாக இருந்த விராட் கோலி ஒரு முறை கூட ஐசிசி கோப்பையை   வெல்லவில்லை என்று அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு கேப்டனாக அமர்ந்த ரோகித் சர்மாவும் டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா புது கேப்டனாக டி20 அணியின் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐம்பது ஓவர் உலககோப்பையும் , 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டி20 உலககோப்பையும் நடைபெறுகிறது.

- Advertisement -