பீஸ்ட் திரைப்பட நாயகன் விஜயுடன் கேப்டன் தோனியை ஒப்பிட்டு பேசிய தினேஷ் கார்த்திக்

0
55
Dinesh Karthik comparing MS Dhoni with Actor Vijay

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய அளவில் ரசிகர் பட்டாளம் அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் அனைத்து மைதானத்திலும் அந்த அணியின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து இருப்பார்கள். தொலைக்காட்சியில் இருந்து நாம் பார்த்தாலும் ஆங்காங்கே மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து கொண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்வதை நம்மால் காண முடியும்.

குறிப்பாக அந்த அணியின் கேப்டன் தல தோனியை காண்பதற்காகவே ஒரு பட்டாளம் மைதானத்திற்கு படையெடுத்து வரும். அதிலும் அவர் பேட்டிங் ஆர்டர் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் வேலையில் அரங்கமே அதிரும் என்று கூட கூறலாம். மகேந்திர சிங் தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தற்பொழுது தினேஷ் கார்த்திக் விளக்கியுள்ளார்.

பீஸ்ட் படத்தில் வரும் விஜய் போல அவருக்கு கரகோஷம் எழும்

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அப்போட்டி நடந்து முடிந்த பின்னர் பெங்களூரு அணியின் புதிய பினிஷரான தினேஷ் கார்த்திக் மகேந்திர சிங் தோனி குறித்துப் பேசியிருக்கிறார்.

“தல தோனி மைதானத்திற்குள் வரும் வேளையில் அவருக்கான கோஷங்கள் பயங்கரமாக இருக்கும். மைதானமே அதிரும் அளவுக்கு கர கோஷங்கள் விண்ணைப் பிளக்கும். எடுத்துக்காட்டிற்கு பீஸ்ட் பாட விஜய் மாதிரி நம்ம தல. பீஸ்ட் படத்தில் விஜய் வரும் ஒவ்வொரு காட்சிக்கு ரசிகர்கள் எவ்வாறு கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்வார்களோ, அதே கரகோஷம் மற்றும் ஆரவாரம் மகேந்திர சிங் தோனிக்கு இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். சென்னை அணி விளையாடும் போட்ரியில் மைதானம் எங்கும் சென்னை அணி ரசிகர்கள் தான் இருப்பார்கள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை”, என்று கூறியுள்ளார்.