மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டியில் அதிரடி காட்டிய ஷாருக் கான் ; தினேஷ் கார்த்திக் அபார சதம் – தமிழக அணி ரன் குவிப்பு

0
2728
Dinesh Karthik and Sharukkhan

இந்த ஆண்டிற்கான விஜய் ஹசாரே டிராபி தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சல பிரதேச அணிகள் பலப்பரிட்சை மேற்கொண்டு வருகின்றன. போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய தமிழக அணி 50 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்துள்ளது.

தமிழக அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 103 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 116 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாபா இந்திரஜித் 71 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 80 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல ஃபினிஷர் ஷாருக்கான் 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 42 ரன்கள் குவித்து தமிழக அணிக்கு இறுதி நேரத்தில் மிகப்பெரிய அளவில் கை கொடுத்து உள்ளார்.

- Advertisement -

விஜய் ஹசாரே தொடரில் அதிரடி காட்டி வரும் ஷாருக்கான்

டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் சமீப நாட்களில் தமிழக அணிக்காக இறுதி கட்டத்தில் இறங்கி ஃபினிஷராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதி போட்டியில் கூட தமிழக அணியை தனது அதிரடியான பேட்டிங் மூலமாக வெற்றி பெறச் செய்தார்.சையது முஷ்டாக் அலி தொடரில் அவர் எவ்வாறு சிறப்பாக விளையாடினாரோ, அதேபோல தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்.

விஜய் ஹசாரே தொடரில் இதுவரை மொத்தமாக 211 ரன்களை ஷாருக்கான் குவித்துள்ளார். இந்தத் தொடரில் அவரது பேட்டிங் ஆவெரேஜ் 42.20 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 183.47 ஆக உள்ளது. இந்த தொடரிலேயே அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய பேட்ஸ்மேன் ஷாருக்கான் தான். இவருக்கு அடுத்தபடியாக 2வது சிறந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய பேட்ஸ்மேனின் சதவிகிதம் 142.30 ஆகும். அதேபோல இந்தத் தொடரில் 130+ ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் வெறும் மூவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த தொடரில் விளையாடிய வீரர்களில் மத்தியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் 135+ ஸ்ட்ரைக் ரேட் விகிதத்திலும், 35+ ஆவெரேஜ் விகிதத்திலும் விளையாடவில்லை. இப்படியாக அபாரமான ஆவெரேஜ் மறுபக்கம் அபாரமான ஸ்ட்ரைக் ரேட் என இரண்டிலும் கை தேர்ந்த ஷாருக்கான், தமிழ்நாட்டின் கீரோன் பொல்லார்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -