டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரரின் நெகிழ்ச்சியான ட்வீட்டுக்கு ஹர்திக் பாண்டியா ரீட்வீட்!

0
233
Hardik pandya

சற்று முன் இந்திய கிரிக்கெட் வாரியத்தால், அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியும், அதற்கடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் பெரிதான மாற்றங்கள் என்று எதுவும் கிடையாது. ஆவேஸ் கான் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் அணிக்குள் மீண்டும் வந்து இருக்கிறார்கள். இவர்களுடன் புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஸ்தீப் சிங் உள்ளனர்.

- Advertisement -

மேலும் இந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக தமிழக வீரர் அஸ்வின், சாகல், மற்றும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் படேல் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் பகுதிநேர ஆப் ஸ்பின் பந்து வீச்சாளர் தீபக் ஹூடா அணியில் இருக்கிறார். விக்கெட் கீப்பர்களாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருக்கிறார்கள்.

அணியில் பேட்ஸ்மேன்களாக கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் கேஎல்.ராகுல், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா மற்றும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் இந்த அணிக்கு பெஞ்ச் வீரர்களாக முகமது சமி, தீபக் சஹர், ரவி பிஷ்னோய், ஸ்ரேயாஸ் ஆகியோர் இருக்கிறார்கள்.

டி20 உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி விபரம்.

- Advertisement -

கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஆர்.அஸ்வின், ஹர்சல் படேல் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஸ்தீப் சிங், சாகல்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக மிகச்சிறப்பாக பேட்டிங்கில் இறுதிக்கட்ட நேரத்தில் செயல்பட்டதால் இந்திய டி20 அணிக்கு 37 வயதான, 18 வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கின்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றார். இந்திய அணிக்காக ஒரு உலகக் கோப்பையையாவது வென்று தரவேண்டும், உலகக் கோப்பையை வெல்லும் அணியில் இருக்க வேண்டும் என்பது அவரது பெரிய விருப்பமாகும். தற்போது அந்த அவரது விருப்பம் பாதி நிறைவேறியிருக்கிறது. அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். இதற்கு அவர், கனவு பலித்தது என்று ட்வீட் செய்திருக்கிறார். இதற்கு ரீட்வீட் செய்துள்ள ஹர்திக் பாண்டியா சாம்பியன் என்று தலைப்பு கொடுத்து இருக்கிறார். இதற்கான டுவிட்டரில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!