வித்தியாசமான தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பை!

0
2594
Shikardhawan

‘பிசிசிஐ’  ” புன்னகை , நட்பு , கேலி  இவற்றுடன் கோப்பை அறிமுகம் “

இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக, மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்  நியூசிலாந்தின்  ‘ஆக்லாந்து’ நகரில் நாளை முதல் தொடங்க உள்ளது .இதன் முன்னோட்டமாக இன்று  கோப்பை அறிமுக விழா  ஆக்லாந்தின்  ‘இடன் பார்க்’ மைதானத்தில் நடைபெற்றது  இதில் இந்திய அணியின் ‘கேப்டன் ஷிகர் தவானு’ம் நியூசிலாந்து அணியின் கேப்டன் ‘கேன் வில்லியம்சனு’ம் கலந்து கொண்டனர் .

ஏற்கனவே டி20 தொடரை கைப்பற்றிய முனைப்புடன் இந்திய அணியும் ,உலகக் கோப்பை அரைஇறுதியின் தோல்வி ‌,அதனைத் தொடர்ந்து இந்திய அணி யுடனான  டி20 தொடரின் தோல்வி  ஆகியவற்றில் இருந்து மீண்டு  வெற்றியின் பக்கம்   திரும்ப  நியூசிலாந்த அணி   போராடும் என்பதால்  இந்த ஒரு நாள் போட்டி தொடர் பரபரப்பாக இருக்கும் .

கடந்த இரண்டு தொடர்களில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய  ‘ஷுப்ர்மன் கில்’ தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான  தொடரில்  சிறப்பாக ஆடினாலும்  பெரிய ரன்கள் எதையும் குவிக்கவில்லை . இந்தத் தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது . டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத  ‘சஞ்சு சாம்சன் ‘ மற்றும்  ‘உம்ரான் மாலிக்’ இருவருக்கும்   நாளை வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடாத கேப்டன் ‘ஷிகர் தவான்’  இந்தத் தொடரில்  நன்றாக ஆட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் . ‘புவனேஸ்வர் குமாரு’க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில்  புதிய பந்துவீச்சாளரான  ‘குல்தீப் சென்’ க்கு   வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

இன்றைய கோப்பை அறிமுக நிகழ்ச்சியில்  ‘ஷிகர்  தவான்’ மற்றும் ‘கேன் வில்லியம்சன்’ இருவரும்  நட்பு ரீதியிலான வேடிக்கையில் ஈடுபட்டது  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது . இது  தொடர்பான காணொளியை  தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள ‘பிசிசிஐ’  ” புன்னகை , நட்பு , கேலி  இவற்றுடன் கோப்பை அறிமுகம் ” என்று தலைப்பிட்டு இருந்தது .

இந்த வீடியோவில்  ஷிகர் தவான் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும்  ஒருவருடன் ஒருவர் நன்றாக பேசி சிரித்து , நட்புடன் உரையாடி இருப்பது  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது .