கடைசி ரெண்டு மேட்ச்ல நான் சிக்ஸ் அடிக்கல ; இந்த மேட்ச்ல 17 வது ஓவர் வரை ஃபோரே அடிக்கல – ஆட்டநாயகன் சுப்மன் கில்!

0
800
Gill

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது குஜராத்!

இந்தப் போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் சகா இருவரும் மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள்.

- Advertisement -

ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய சகா 10 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 43 பந்தில் 81 ரன்கள் எடுத்து வலிமையான துவக்கத்தை தந்தார்.

சகா தந்த இந்த வலிமையான துவக்கத்தை மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் கில் தொடர்ந்து இருபதாவது ஓவரின் கடைசி பந்து வரை எடுத்துச் சென்றார்.

இறுதிவரை களத்தில் நின்ற கில் 51 பந்தில் 94 ரன்கள் குவித்தார். இதில் மொத்தம் இரண்டு பவுண்டர்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. இதைத் தவிர்த்து ஏழு சிக்ஸர்களை கில் நொறுக்கினார். இந்த இரண்டு பவுண்டர்களும் 17வது ஓவருக்கு பின்தான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்ற சுப்மன் கில் பேசும் பொழுது ” தொழில்நுட்ப ரீதியாக இது எளிதான நாள் கிடையாது. லக்னோ பவர் பிளேவில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் மோகித்தும் மற்றவர்களும் அவர்களை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.

சகா பேட் செய்வதற்கும் ஒரு பிணைப்பில் இருப்பதற்கும் மிகவும் அருமையானவர். அவர் முதல் சீசனில் இருந்து விளையாடி வருகிறார். உடல் தகுதியைக் கவனிப்பதிலும் சரியானவற்றை வழங்குவதிலும் தனித்துவமானவர்.

வாய்ப்புக்காக காத்திருப்பதும், கட்டுப்படுத்துவதும், அலைக்கழிக்கப்படாமல் இருப்பதும் எனக்கு முக்கியமானதாக இருந்தது.

இந்தப் போட்டிக்கு முன் இரண்டு போட்டிகளாக நான் சிக்ஸர்கள் அடிக்கவில்லை என்று நினைக்கிறேன். இந்தப் போட்டியில் நான் பதினேழாவது ஓவரில்தான் பவுண்டரியை அடித்தேன். இதனால் நான் எனது திறமையை தொடர்ந்து மேம்படுத்த முயற்சி செய்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!