நேற்று ஐபிஎல் தொடரில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களம் இறங்கிய முசீர் கானை விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்தார் என சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 101 ரன்னில் சுருட்டி, அந்த இலக்கை பெரும் 10 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு எட்டி எட்டு விக்கெட் இழப்புக்கு அபார வெற்றி பெற்றது. மேலும் நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
நேற்றைய போட்டிக்கான ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இருந்தது. இதை ஆர்சிபியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். அதே வேளையில் அதிரடியாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்திற்கு மதிப்பு கொடுக்காமல் விளையாடி சரிந்தார்கள்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை ஏற்கனவே பத்து வரையில் மிக நீளமாக இருந்தது. ஆனால் நேற்று இதுவும் போதாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் ஆல் ரவுண்டர் இளம் அறிமுக வீரர் சர்பராஸ் கான் தம்பி முசீர் கானை ரிக்கி பாண்டிங் களம் இறக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக அமைந்தது.
நேற்று முசீர் கான் பேட்டிங் செய்ய வரும் பொழுது ஸ்லிப் பகுதியில் நின்றிருந்த விராட் கோலி ” கொஞ்ச நேரத்திற்கு முன்பு தண்ணி கொண்டு வந்த பையன் இப்பொழுது பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டிருக்கிறான்” என்று சிரித்தபடி ஹிந்தியில் கூறுகிறார். அதே சமயத்தில் ஒரு இளம் வீரரை இவ்வாறு விராட் கோலி நடத்தி இருக்கக் கூடாது என சமூக வலைதளத்தில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க : என் டீம்ல நான் அவரோட ரசிகன்.. அவர குழப்ப விரும்பல.. ஒரு போட்டிதான் கப் நமக்குதான் – ரஜத் பட்டிதார் பேச்சு
இன்னொரு பக்கத்தில் விராட் கோலி அளவுக்கு மீறாத முறையில்தான் பேசியிருக்கிறார், அவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தன்னுடைய அணிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார், ஒருத்தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவெல்லாம் நினைப்பது கிடையாது என்று பாராட்டியும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.