“ஆடுகள மாற்றத்தில் தவறு நடந்ததா?” – உண்மையை உடைத்து பேசிய கேன் வில்லியம்சன்!

0
2150
Williamson

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

கடந்த இரண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களாக இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வந்தது.

- Advertisement -

மேலும் இது டி20 உலகக் கோப்பை மற்றும் வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இந்திய அணிக்கு தொடர்ச்சியாக நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

தற்பொழுது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்து இருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்றைய போட்டிக்கு பயன்படுத்தப்பட இருந்த ஆடுகளம் திடீரென மாற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. இது குறித்து ஐசிசி தெளிவான அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் ஐசிசி அதிகாரி சம்மதத்துடன் எல்லாம் நடைபெற்றதாகக் கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இருந்த போதிலும் கூட வெளியில் இருந்து இந்திய அணி கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதும், ஐசிசி மீதும் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது சம்பந்தமாக நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த கேப்டன் கேன் வில்லியம்சன் இடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. ஆடுகளம் மாற்றத்தில் தவறு இருந்ததா? அது ஆட்டத்தை மாற்றியதாக என்பது குறித்து கேட்கப்பட்டன.

இதுகுறித்து பதில் அளித்த கேன் வில்லியம்சன் “எந்தத் தவறும் இல்லை. அதாவது இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளம். நாம் பார்த்தபடியே இது ஒரு விளையாட நல்ல ஒரு ஆடுகளம். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து இதிலிருந்து ஏராளமானவற்றை பெற்றார்கள்.

கண்டிஷன் அடிப்படையில் மின் விளக்குகளின் கீழ் இங்கு பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினமாக மாறும். இதைத்தான் இந்த தொடர் முழுவதும் பார்த்து வருகிறோம். மற்றபடி வேற எதுவும் இல்லை.

பரவாயில்லை இதைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இந்திய அணி உண்மையில் நன்றாக விளையாடினார்கள். ஆனால் இந்த நிலைக்கு வந்து மேலே செல்ல முடியாமல் இருப்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!