ஜெய்ஸ்வால் கில் பண்ட் கிடையாது.. இந்த இந்திய பையன்தான் எங்க ஆளுங்கள கவர்வாரு – டிம் பெய்ன் கணிப்பு

0
667
Paine

இந்திய அணியின் ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு இளம் வீரர் ஆஸ்திரேலியர்களின் கவனத்தை கவரக்கூடியவராக இருப்பார் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் டிம் பெயின் கூறியிருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலிய அணி முன்கூட்டியே பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது. இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று இருக்கிறது. மேலும் இந்திய அணி இந்திய ஏ அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விளையாட பயிற்சி போட்டியையும் ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

திடீரென உருவான நம்பிக்கை

இந்திய அணிக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு ருதுராஜ் தலைமையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடி இரண்டையும் தோற்றது. இதில் இரண்டாவது போட்டியில் கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் இருவரும் இந்திய ஏ அணியில் இடம் பெற்று விளையாடினார்கள்.

இந்த நிலையில் கே.எல்ராகுல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். மேலும் மொத்த இந்திய பேட்ஸ்மேன்களும் ஏமாற்றம் அளித்த நிலையில், துருவ் ஜுரல் மட்டும் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தினார். இந்திய அணி நிர்வாகத்திற்கு அவரது சிறப்பான பேட்டிங் புதிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியர்களை கவரப்போகிறார்

துருவ் ஜுரல் குறித்து டிம் பெயின் கூறும் பொழுது ” இந்தியாவுக்கு சில டெஸ்ட் போட்டிகளில் துருவ் ஜுரல் விளையாடி 63 ரன் சராசரி வைத்திருக்கிறார். அவர் பேட்டிங் செய்வதை பார்க்கும் பொழுது அவர் ஏன் சிறப்பானவர் என்பதற்கான காரணங்கள் தெரிகிறது. அவர் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் வாய்ப்பு பெற்று விளையாடாவிட்டால் நான் ஆச்சரியப்படுவேன்”

“தற்போது அவருக்கு 23 வயதுதான் ஆகிறது. ஆனால் தன்னுடைய அணியில் இருந்த மற்ற எல்லா பேட்ஸ்மேன்களை விடவும் அவர் சிறந்த தரத்தில் இருந்தார். துணை கண்டத்தைச் சேர்ந்த பலருக்கும் எங்கள் கண்டிஷனில் வேகம் மற்றும் பவுன்சை சமாளித்து விளையாடுவது கடினமாக இருக்கும். ஆனால் அவர் மிகவும் எளிதாக கண்டிஷனை சமாளித்து விளையாடினார்”

இதையும் படிங்க : டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ்ல இதை செய்திருக்கக் கூடாது.. என்ன லாஜிக்குனே புரியல – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

“ஆஸ்திரேலியாவின் இந்த கோடை காலத்தில் துருவ் ஜுரலை கவனித்துக் கொள்ளுங்கள். அவர் எங்கள் ஆஸ்திரேலியர்களை கவரப்போகிறார். எங்களின் மூன்று பெரிய வேத பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் இன்னொரு படி நிலைக்கு வரப் போகிறார்.அவர் சிறப்பாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவார் என்று தெரிகிறது” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -