தோனி அடித்தும் சிஎஸ்கே தோல்வி.. வைரலாகும் அவரின் 10 வருட பழைய ட்வீட்.. ரசிகர்கள் உற்சாகம்

0
109

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான சென்னை அணியின் மூன்றாவது போட்டியில், 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும் மகேந்திர சிங் தோனியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்த டெல்லி அணியினர் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தனர். முதல் இரண்டு போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு டெல்லி அணியின் பயிற்சியாளர் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்தப் போகிறோம் என்று கூறியிருந்தார். அவர் கூறியதை நிறைவேற்றும் வகையிலேயே டெல்லி அணியின் ஆட்டம் அவ்வளவு அற்புதமான அமைந்தது.

- Advertisement -

முதல் இரண்டு போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணியினர் இப்போட்டியில் அதனை வெளிப்படுத்தவில்லை. ஆடுகளமும் டெல்லி அணி பேட்டிங் செய்யும்போது சாதகமாக அமைந்ததால் சென்னை அணிக்கு எதுவுமே கை கொடுக்காமல் போய்விட்டது. பின்னர் 192 ரன்கள் கடின இலக்கை எதிர்கொண்ட சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையாததால் இந்திய அணியின் அனுபவ வீரர் ரகானேவும், 14 கோடிக்கு வாங்கப்பட்ட டாரி மிச்சலும் அணியை சரிவிலிருந்து நிறுத்தினர்.

அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த பிறகு, சென்னை அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார். அவர் களம் இறங்கியது முதல் போட்டி சென்னையில் நடக்கிறதா? அல்லது விசாகப்பட்டினத்தில் நடக்கிறதா? என்ற சந்தேகம் தான் அனைவருக்கும் இருந்தது. அவர்தான் சந்தித்த முதல் பந்தில் அடித்த பவுண்டரியில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கும் அளவுக்கு வெளிப்பட்டது.

அப்படி ஒரு பொழுதுபோக்கான ஆட்டத்தை ரசிகர்களுக்கு நேற்று இரவு படைத்தார் தோனி. வெறும் 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 37 ரன்கள் குவித்தார். இருப்பினும் இருபது ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வி சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தினை அளித்தாலும் மகேந்திர சிங் தோனியின் இந்த அதிரடி ஆட்டம் குதூகலப்படுத்தியது. இந்த நிலையில் அவர் பத்து வருடங்களுக்கு முன்னால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இப்போது வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

தோனியின் 10 வருட பழைய ட்வீட்

அதில் “எந்த அணி வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. நான் பொழுதுபோக்கிற்காக வந்துள்ளேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் அவர் இட்ட பதிவை ரசிகர்கள் அதை கண்டுபிடித்து இப்போது அதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: தோனி வெற்றிகரமாக ஓய்வு பெறுவார்னு சொல்லாதிங்க.. ஆனா இது நடக்கும் – ஸ்காட் ஸ்டைரிஸ் பேச்சு

தோனியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி குறைந்த ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் நெட் ரன் ரேட்டில் அந்த அணிக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் வரப்போவதில்லை. எனவே அடுத்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை அணி கட்டாயம் இருக்கும் என்பது சந்தேகம் இல்லை.