இஷான் கிஷான் திறமை பற்றி அன்றே சொன்ன தோனி – இசான் சிறு வயது பயிற்சியாளர் பகிர்ந்த ருசிகர தகவல்!

0
930
Ishankishan

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் நேற்றுடன் முடிவடைந்தது . கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இது இந்திய அணிக்கு ஒரு ஆறுதல் வெற்றியாக இருந்தாலும் இசான் கிசான் மற்றும் விராட் கோலி ஆட்டம் இந்திய அணிக்கு புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது .

நேற்றைய போட்டியில் மிக அதிரடியாக ஆடிய இசான் கிசான் 131 பந்துகளில் 210 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் . மிக வேகமாக அடிக்கப்பட்ட இரட்டை சதம் இதுவாகும் . மற்றும் மிகவும் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஒரு நாள் போட்டி ஸ்கோர் இதுவாகும் .

- Advertisement -

மேலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டிகளில் நேற்று மீண்டும் சதம் அடித்தார் இவர் 91 பந்துகளில் 113 ரன்களை குவித்தார் .

இஷாந்த் கிஷான் நேற்று பல உலக சாதனைகளை படைத்ததால் கிரிக்கெட் வீரர்களாலும் கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறார் . இந்நிலையில் அவருடைய சிறு வயது பயிற்சியாளர் ‘உத்தம் மஜும்தார்’, ‘இசான் கிசான்’ பற்றி இந்திய அணியின் ‘தல’ ‘எம்.எஸ்.தோனி’ பகிர்ந்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் .

இது பற்றி பேசிய மஜும்தார் “இஷான் கிஷான் மற்றும் அவரது மூத்த சகோதரர் ராஜ் கிசான் ஆகியோருக்கு இளம் வயது முதலே நான் தான் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன்.இசான் கிசானின் மூத்த சகோதரர் ராஜ் கிஷான் ஒரு திறமையான கிரிக்கெட் வீரர் தான் .ஆனால் அவரது பெற்றோரின் விருப்பப்படி அவர் மருத்துவ படிப்பை தேர்வு செய்ததால் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது” என்று தெரிவித்தார்..

- Advertisement -

இது குறித்து மேலும் பேசிய அவர் “இஷான் கிஷானின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளில் ஒருவர் கிரிக்கெட் வீரராகவும் மற்றொருவர் மருத்துவராகவும் விரும்பியதால் மூத்த சகோதரரான ராஜ் கிசான்,இசான் கிசானுக்காக தன்னுடைய கிரிக்கெட்டை விட்டுக் கொடுத்துவிட்டு மருத்துவ படிப்பை தேர்வு செய்ததாக” தெரிவித்தார்,

இஸான் கிசானின் சிறுவயது கிரிக்கெட் பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர் “முதன் முதலாக அவரது தந்தை’ 6′ வயதாக இருக்கும்பொழுது என்னிடம் கிரிக்கெட் பயிற்சிக்காக அழைத்து வந்தார் . அப்பொழுது மிகவும் சிறியவனாக இருந்ததால் அவருக்கு ‘அண்டர் ஆர்ம்’ முறையில் நான் பந்து வீசினேன். அந்த நேரத்தில் இசான் கிசான் ஆடிய ‘கவர் டிரைவ்’ மிகவும் நேர்த்தியாக இருந்தது .ஒரு ஆறு வயது சிறுவன் இவ்வளவு நேர்த்தியாக கவர் டிரைவர் ஆடுகிறானே என்று ஆச்சரியப்பட்டேன் . இது குறித்து அவரது தந்தை பிரணவ் கிசான் இடம் உங்கள் மகன் மிகப் பெரிய கிரிக்கெட் வீரராக வருவார் என்று கூறினேன்” என தெரிவித்தார்.

அதற்குப் பின் அவர் “இஷான் கிஷான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கு முன்பாக ‘எம் எஸ் தோனி’ அவரிடம் பகிர்ந்து கொண்ட கருத்தை தெரிவித்தார் .ஒருமுறை இசான் கிசான் பயிற்சியில் இருக்கும் போது மைதானத்திற்கு வந்த எம் எஸ் தோனி இசான் கிசானை சந்தித்து உரையாடினார் அப்போது கிஷான் சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கவில்லை”

இஷான் கிஷான் இடம் பேசிய தோனி “இவ்வளவு திறமைகளை வைத்துக்கொண்டு இந்திய அணிக்கு நீ ஆடவில்லை என்றால் இது உனக்கு நீயே இழைத்துக் கொள்ளும் அநீதியாகும்” என்று தெரிவித்ததாக இசான் கிசானின் பயிற்சியாளர் உத்தமஜும்தார் கூறி முடித்தார் .