தோனி இந்திய கிரிக்கெட்டுக்குள் மீண்டும் வரவேண்டும் ; ஆனால் ஒரு நிபந்தனை; சுனில் கவாஸ்கர் பரபரப்பு கருத்து!

0
1278
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதியால் ரன்கள் அடிக்கப்படுவதின் விகிதம் கூடி, மேலும் போட்டி அதிக முறை கடைசிப் பந்து வரை சென்று மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் போட்டிகள் இருக்கிறது!

இன்னொரு பக்கத்தில் இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்ட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்தும், மைதானத்தில் அவர் வருகையின் போதும் எக்கச்சக்கமான உணர்வுகள் பரிமாறப்படுகின்றன!

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடர் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று பலரும் நினைத்திருந்த வேளையில், மகேந்திரசிங் தோனி நான் அப்படி கூறவில்லை என்று தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அதே சமயத்தில் கடந்த ஐபிஎல் தொடரை விட இந்த ஐபிஎல் தொடரில் அவரது பேட் வீச்சு வேகமும், பந்தை கனெக்ட் செய்யும் துல்லியமும் அதிகரித்து பந்துகள் சிக்ஸர்களுக்கு கடைசி நேரத்தில் வழக்கம் போல் பறக்கின்றன. இது ரசிகர்களை மேன்மேலும் பரவசப்படுத்துகிறது.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யலாம் என்று பேசி உள்ள கவாஸ்கர் ” மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று சில காலம் கழித்து இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கலாம். அது அப்படித்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

- Advertisement -

மேலும் நீங்கள் ஒரு அணியின் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் பொழுது உங்களுக்கு ஓய்வு பெற்றதிலிருந்து சில காலம் தேவைப்படும். இந்தக் குளிர்ச்சியான காலம் தேவை என்று நம்புகிறேன்.

மகேந்திர சிங் தோனி தேர்வு குழு தலைவராகவோ, அணியின் மேனேஜராகவோ மற்றும் பயிற்சியாளராகவோ எதுவாக வந்தாலும், அவர் விளையாடும் வீரரை பற்றி முடிவு எடுக்க வேண்டி இருப்பதால், அவர் ஓய்வுக்குப் பிறகு ஒரு மூன்றாண்டு காலம் கழித்துத்தான் இந்தப் பொறுப்புகளுக்கு வருவது சரியாக இருக்கும்!” என்று கூறி இருக்கிறார்!