“அந்த வருட ஐபிஎல் தொடரில் கேப்டனாக தோனி செய்து காட்டியது அசாத்தியமானது” – 2023 ஐபிஎல் போட்டி தொடருக்கு முன்பாக தோனியின் கேப்டன்சிக்கு கவாஸ்கர் புகழாரம்!

0
236

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டித் தொடர் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

இது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் ஆகும். கடந்த 15 சீசன்களிலும் ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான அணிகள் என்றால் அது சி.எஸ்.கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான். ஐபிஎல் போட்டி தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக சி.எஸ்.கே அணி நான்கு முறை ஐபிஎல் தொடர்களில் சாம்பியனாக இருந்திருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியை பொருத்தவரை 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்து இந்த பதினாறாவது சீசன் வரை எம்.எஸ்.தோனி மட்டுமே கேப்டனாக இருந்திருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜாவிற்கு கேப்டன் பதவியை அளித்தாலும் தொடரின் இடையே மீண்டும் எம்.எஸ்.தோனி கேப்டன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர்களில் மட்டுமல்லாது இந்திய அணிக்கும் மிகச்சிறந்த கேப்டனாக இருந்திருக்கிறார் எம் .எஸ் தோனி. அவர் ஏன் ஒரு சிறந்த கேப்டனாக இருக்கிறார் என்பது பற்றி தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவானும் தற்போதைய பிரபலமான கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர்..

இது பற்றி பேசி இருக்கும் கவாஸ்கர் ” எம்.எஸ் தோனியை ஏன் ஒரு சிறந்த கேப்டன் என்று சொல்கிறேன் என்றால் சிஎஸ்கே அணி இரண்டு வருடங்கள் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தது. ஆயினும் 2018 ஆம் ஆண்டு அவர்கள் மீண்டும் ஐபிஎல் க்கு வந்து அந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்றனர். அது மிகவும் அசாத்தியமான ஒரு விஷயம் . இரண்டு வருடங்கள் அந்த அணி ஒன்றாக இல்லை. அதன் வீரர்கள் வேறு வேறு அணியுடன் இருந்தனர். ஆயினும் அவர்கள் மீண்டும் சிஎஸ்கேவில் இணைந்து ஒரு அணியாக ஆடி வெற்றி பெற்றது என்பது மிகவும் ஆச்சரியமானது . சி.எஸ்.கே அணியின் அந்த வெற்றி நமக்கு எம்.எஸ் தோனியின் தலைமை பண்பை காட்டுகிறது. இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ஒரு மனிதன் தனது அணியை எப்படி ஒன்றிணைக்க முடியும் என்பதை அது நமக்கு சொல்கிறது ‘ என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய கவாஸ்கர் ” சில நேரங்களில் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் டீம் ஸ்பிரிட் என்பது இருக்கும். ஆனால் இரண்டு வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு ஒரு அணியை மீண்டும் ஒருங்கிணைப்பது என்பது நிச்சயமாக ஒரு அசாத்தியமான செயல். அது தோனி எப்படிப்பட்ட ஒரு கேப்டன் என்பதை காட்டுகிறது” என்று கூறினார்.

- Advertisement -

தோனியின் பேட்டிங் பற்றி பேசிய அவர் ” அந்த வருடத்தில் எம் எஸ் தோனியின் பேட்டிங்கும் மிக அற்புதமாக இருந்தது. அதிலும் ஒரு போட்டியில் ஓவருக்கு 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சூழ்நிலையில் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருந்த பந்துகளை லாங் கான் திசையில் அடித்த சிக்சர்கள் மிகச் சிறப்பானவை” எனக் கூறினார்.” “இதுபோன்ற அசாதாரணமான விஷயங்களையும் அவர் சாதித்துக் காட்டுவதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அதுபோன்ற அசாத்தியமான விஷயங்கள் தான் மற்ற வீரர்களிடமிருந்து தோனியை தனித்துவம் மிக்கவராக காட்டுகிறது எனக் கூறி முடித்தார்”சுனில் கவாஸ்கர்.