இந்தக் காரணத்தால பாண்டிங்கை விட தோனிதான் பெஸ்ட்; ஆஸ்திரேலியா பிராட் ஹாக் நச் கருத்து!

0
1207
Hogg

கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த கேப்டன்களின் வரிசையில் ஸ்டீவ் வாக் இடம் இருந்து ஆஸ்திரேலியா அணியை எடுத்துக்கொண்டு பெரும் பாய்ச்சல் நிகழ்த்திய ரிக்கி பாண்டிங்க்கு தனி இடம் உண்டு!

2000 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி உலக கிரிக்கெட்டில் தனி ஆதிக்கம் செலுத்தியது. இவர்களை ஏதாவது ஒரு ஆட்டத்தில்தான் எங்காவது வீழ்த்த முடிந்தது எதிராணிகளால். அதற்கே பெரும்பாடு பட வேண்டியதாக இருந்தது!

- Advertisement -

இதேபோல் இந்திய கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன்களின் வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு தனியிடம் எப்பொழுதும் உண்டு. ஐசிசி நடத்தக்கூடிய 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக இவர் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

மகேந்திர சிங் தோனியை இந்திய கேப்டன்களுடன் ஒப்பிட்டு அவ்வப்போது விவாதங்கள் நடைபெறுவது உண்டு. அதேபோல் உலக கேப்டன்களுடன் ஒப்பிட்டும் விவாதம் நடக்கும். தற்பொழுது இந்த வகையில் ரிக்கி பாண்டிங் உடன் மகேந்திர சிங் தோனியை ஒப்பிட்டு ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் சில முக்கிய கருத்துகளை குறிப்பிட்டு தோனியை முன்னிலைப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“ரிக்கி பாண்டிங் ஒரு அற்புதமான அணியைக் கொண்டு இருந்தார். மகேந்திர சிங் தோனியும் ஒரு சிறந்த அணியைக் கொண்டு இருந்தார். இருவரும் சிறப்பாகச் செயல்பட்டனர். உங்களால் அவர்களைப் பிரித்துப் பார்ப்பது முடியாது. ஆனால் இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி முன்னால் அரசியல் இருந்தது. இந்தக் காரணத்தால் ரிக்கி பாண்டிங்க்கு முன்னாள் தோனியை வைக்கலாம் என்று கூறுவேன் ” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” மேலும் ரிக்கி பாண்டிங் சுற்றி நிறைய நல்ல திறமையான கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் அவர்களுக்கு தங்களின் ரோல் என்னவென்றும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் மிக நன்றாகத் தெரியும். ரிக்கி பாண்டிங் கேப்டனாக சில அம்சங்களை மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதாகவும் கட்டுப்படுத்த வேண்டியதாகவும் இருந்தது. ஆனால் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி இதை எல்லாம் தாண்டி அவர் முன்னால் இருந்த அரசியலையும் வெல்ல வேண்டியதாய் இருந்தது. இதனால் தோனி பாண்டிங்கை விட முன்னிலை பெறுகிறார். மன்னிக்கவும் ரிக்கி!” என்று கூறியிருக்கிறார்!