உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை ஜெயிக்க தோனி தான் வழிக்காட்டினார்- ஹர்பஜன்சிங் புதிய தகவல்!

0
294
Harbajan singh

2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டிற்கு மிக முக்கியமான ஆண்டு. இந்திய அணி இந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையில் கைப்பற்றியிருந்தது. இருபத்தி எட்டு வருடங்கள் கழித்து 50 ஓவர் உலகக் கோப்பை இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப கிடைத்தது!

இந்த உலகக்கோப்பையில் மறக்க முடியாத பல நினைவுகள் உண்டு. காலிறுதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இந்த மூன்று நாக் அவுட் போட்டிகளையுமே இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி எந்த ஒரு இடத்திலும் எளிதாய் இருந்து வெற்றியை பெறவில்லை. நெருக்கடிகள் இருந்தும் மீண்டே வெற்றியைப் பெற்றது.

- Advertisement -

லீக் சுற்றுகளில் பெரிய அளவில் ரன்களைக் குவித்து தென் ஆப்பிரிக்க அணியிடம் தோற்றது, இங்கிலாந்து அணியோடு சமன் செய்தது, மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியோடு யுவராஜ் சிங் பந்து பேட்டிங் என இரண்டிலும் மராட்டி தனி ஒரு நபராக வெற்றியை இந்திய அணிக்கு கொண்டு வந்து தந்தார். இல்லையென்றால் அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோற்று இருக்க அதிக வாய்ப்பு உண்டு.

இப்படி போன உலககோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் நடந்த அரையிறுதி போட்டி வழக்கம்போலவே இந்தியா-பாகிஸ்தான் மூடும் போட்டிகளுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு பரபரப்பை விட கூடுதலாகவே இருந்தது. அந்தப் போட்டியில் 115 பந்துகளில் 85 ரன்களை சச்சின் எடுக்க இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்களை எடுத்தது.

இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க விக்கெட்டுகள் போயிருந்தாலும், அதற்கடுத்து வந்த கம்ரன் அக்மல், கேப்டன் மிஸ்பா இருவரும் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இந்திய அணிக்கு நெருக்கடியை தந்தார்கள். இந்தப் பார்ட்னர்ஷிப்பை அந்த ஆட்டத்தில் ஹர்பஜன்சிங் உடைத்தார். தற்போது அது குறித்து தனது பழைய நினைவுகளை மீட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஹர்பஜன்சிங் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதி போட்டியைப் பற்றி கூறும்பொழுது ” நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விளையாடிய ஆட்டங்களில் இதுவும் ஒன்று. நான் அந்த ஆட்டத்தில் 5 ஓவர்கள் வீசி 27 இல்லை 27 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தேன். அப்பொழுது டிரிங்ஸ் டைம் வந்தது. என்னிடம் வந்த தோனி விக்கெட்டை சுற்றிவந்து வீசுமாறு கூறினார். அந்த ஆட்டத்தில் கமரன் அக்மலும், மிஸ்பாவும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு ஆபத்தை உருவாக்கினார்கள்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து தேசிய ஹர்பஜன் சிங் ” எனவே நான் அப்பொழுது மீண்டும் பந்துவீச வந்தேன். விக்கெட்டை சுற்றி தோனி என்னிடம் வீச சொல்ல, நான் கடவுளை நினைவு கூர்ந்தேன். வெற்றிக்காக கடவுளிடம் ஜெபித்தேன். கடவுள் என் பேச்சை கேட்டார். நான் விக்கெட்டை சுற்றிவந்து வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அக்மல் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவர் அந்தப் பந்தை முழுவதுமாகத் தவற விட்டார்” என்று தெரிவித்துள்ளார்!

அந்த ஆட்டத்தில் கம்ரன் அக்மல் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி மொத்தமாக அப்படியே சரிந்தது. வெற்றிக்காக பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா தனி வீரராக போராடினாலும் அது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு போதவில்லை. முடிவில் பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது!