பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே ; திருப்பிக் கொடுப்பதில் நாங்கள் எப்போதும் பெயர் போனவர்கள் – சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி

0
625
MS Dhoni and CSK

நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி கடைசி ஓவரில் எம் எஸ் தோனியின் வின்னிங் சிக்ஸர் மூலம் ஹைதராபாத் அணி நிர்ணயித்த இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தமாக 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி நேற்றைய வெற்றியுடன், 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ஆஃப் சுற்றுக்கு தகுதியும் அடைந்துள்ளது.

கம்பேக் கொடுப்பதில் பெயர் போன சென்னை சூப்பர் கிங்ஸ்

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக சுமாராக விளையாடியது. லீக் சுற்றில் முதல் அணியாக அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு லீக் சுற்றில் முதல் அணியாக வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தேர்வாகி மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது.

12 ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தேர்வாகி உள்ளது. அதேபோல பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வாகியுள்ளது 5வது முறையாகும். வேறு எந்த அணியும் ஐந்து முறை முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது இல்லை. கடந்த ஆண்டு ஷார்ஜா மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத சென்னை அணி, நேற்றைய போட்டி மற்றும் அதற்கு முந்தைய போட்டியில் வெற்றி பெற்று ஷார்ஜாவில் இரண்டு தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது.

திருப்பி கொடுப்பதில் நாங்கள் பெயர் போனவர்கள், எம்எஸ் தோனி நெகிழ்ச்சி

கடந்த ஆண்டு ஐபிஎல் நடந்து முடிந்த்தும் அடுத்த ஆண்டு ( இந்தாண்டு ) மிகப்பெரிய கம்பேக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்ததை தற்போது நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம். நாங்கள் அதில் பெயர் போனவர்கள் என்று கேப்டன் எம் எஸ் தோனி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

நேற்றைய போட்டியில் குறிப்பாக பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார். மைதானத்திற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்று கூறினேன், அதை அவர்கள் அதை மிகச்சரியாக செய்து முடித்தார்கள். நேற்றைய போட்டியில் ஹேசல்வுட் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல டிவைன் பிராவோ மற்றும் ஜடேஜா மிக சிறப்பாக பந்து வீசினார்கள் என்றும் பாராட்டினார்.

சென்னை அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் மிக சிறப்பாக தங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தொடர் வெற்றிகளுக்கு அவர்கள் அனைவரும் முக்கிய காரணம். இறுதியாக சென்னை அணி ரசிகர்கள் எப்பொழுதும் எங்களுக்கு ஆறுதலாக இருந்து வருகின்றனர். நல்ல நேரத்திலும் கெட்ட நேரத்திலும் அவர்களுடைய ஆதரவு துளி கூட குறையவில்லை. எங்கள் மீது அவர்கள் வைத்த அபாரமான நம்பிக்கைக்கு, இந்த தொடர் வெற்றிகள் மூலமாக அவர்களுக்கு பரிசளித்து விட்டோமென நம்புகிறோம் என்று எம்எஸ் தோனி சிரிப்புடன் கூறி முடித்தார்.