அடுத்த வருஷம் சேப்பாக்கில் சந்திப்போம்! – தல தோனி கொடுத்த மாஸ் பேட்டி!

0
555

அடுத்த வருடம் சேப்பாக்கத்திற்கு திரும்பி வருகிறோம் என சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை அணி வெளியேறியது. இதற்கு முழு முக்கிய காரணம் துவக்கத்தில மாற்றப்பட்ட கேப்டன் பொறுப்பு தான்.

- Advertisement -

2022 ஐபிஎல்-இல் யாரும் எதிர்பாராத நேரத்தில் ஜடேஜாவிற்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. முதல் எட்டு போட்டிகளில் கேப்டன் பொறுப்பு வகித்த அவர் ஆறு போட்டிகளில் தோல்வியும் இரண்டு போட்டிகளில் வெற்றியையும் பெற்றுத்தந்தார். இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது. அதன் பிறகு தோனி கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார் ஆனால் துரதிஷ்டவசமாக, பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

இதற்கு இடையில் தோனிக்கு அதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது. ஆனால் சென்னையில் முதலமைச்சருடன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “நான் சேப்பாக்கம் மைதானத்தில் தான் எனது ஐபிஎல் போட்டிகளுக்கான ஓய்வு அறிவிப்பேன். அதுவரை ஓய்வு பற்றி எந்த முடிவும் இருக்காது. அது இரண்டு ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகள் ஆனாலும் சரி” என்று பேசினார். இது ரசிகர்கள் மத்தியில் பெருத்த நம்பிக்கையை கொடுத்தது.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக வெகுசில மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. பெரும்பாலான போட்டிகள் மும்பை மைதானத்தில் நடத்தப்பட்டது. சென்னையில் நடத்தப்படவில்லை என்ற ஏக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் அக்டோபர் 9ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மகேந்திர சிங் தோனி, “அடுத்த வருடம் மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறோம். 12 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-இல் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அதற்கு முழு முக்கிய காரணம் சென்னை ரசிகர்கள். நாங்கள் வெற்றிபெறாத போதும் நீங்கள் எங்களுக்கு அதே அளவு ஆதரவு கொடுத்தீர்கள். உங்கள் ஆதரவை ஒருபோதும் உதாசீனப்படுத்த மாட்டோம். மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகிறோம்!.” என்று பேசி உள்ளார்.