தோனி ரொம்ப உண்மையான ஆள் ; இதை நான் மறக்கவே மாட்டேன் – உத்தப்பா நெகிழ்ச்சி பேட்டி!

0
65
Utthappa

பதினாறாவது ஐபிஎல் சீசன் வருகின்ற மார்ச் மாதம் இறுதியில் 31ஆம் தேதி உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது!

நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 13 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியிருக்கிறது. மேலும் மிக அதிகபட்ச முறை இறுதிப் போட்டியில் விளையாடிய அணியாகவும் இருக்கிறது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான ஆண்டாக அமைந்தது. பத்து அணிகள் பங்கு பெற்ற கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர்களான நியூசிலாந்தில் ஆடம் மில்னே, இந்தியாவின் தீபக் சாகர் இருவரும் காயத்தால் விளையாட முடியாமல் போனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கியது.

அதே சமயத்தில் மகேந்திர சிங் தோனி முதல் டி20 உலக கோப்பையை வென்ற பொழுது அணியில் இடம் பிடித்த ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு முதன் முதலாக வாங்கப்பட்டார். அவர் தற்போது தனக்கு சென்னை அணியுடனான முதல் அனுபவத்தில் மகேந்திர சிங் தோனி உடன் ஏற்பட்ட ஒரு முக்கியமான நிகழ்வை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறிய பொழுது ” மகேந்திர சிங் தோனி மிகவும் வெளிப்படையான ஆள். உங்களை புண்படுத்தினாலும் கூட உண்மையைப் பேச அவர் தயங்கவே மாட்டார். நான் சிஎஸ்கே அணிக்காக விளையாட கையெழுத்திட்ட பொழுது என்னை அழைத்த அவர் ‘ நீங்கள் சென்னை அணியின் விளையாடும் லெவனில் இருப்பீர்களா என்று என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால் தொடருக்கு இன்னும் காலம் வெளியே நிறைய இருக்கிறது. நீங்கள் சிஎஸ்கே அணியின் விளையாடுவீர்களா என்று இப்போது என்னால் யோசிக்க முடியாது. நீங்கள் வெளியில் விளையாடும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் விளையாடும் போவதாக இருந்தால் நான் அதை உங்களிடம் தெரிவிப்பேன் ‘ என்று கூறினார். நான் அதுவரையில் ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகள் வெற்றிகரமாக மகிழ்வாக இருந்தவன். ஆனால் அவர் நான் என்ன செய்ய வேண்டுமோ அதை நேராக அழைத்து என்னிடம் கூறினார். அதை நான் இப்பொழுதும் கூட பாராட்டுகிறேன்! என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசி உள்ள ராபின் உத்தப்பா ” என்னுடைய முதல் சீசனில் நான் அவரை பார்க்கும் பொழுது அணியில் உள்ள எல்லோரும் அவரை மகி பாய் என்று அழைப்பதை பார்த்தேன். நான் அவரிடம் சென்று நானும் இப்படி அழைக்க வேண்டுமா என்று கேட்டேன். ஆனால் அவர் அதை நிராகரித்தார். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நீங்கள் அழைக்கலாம். பழைய முறையில் இருந்து எந்த வித்தியாசமும் இல்லை நீங்கள் என்னை மகி என்றும் அழைக்கலாம் அதையே நான் விரும்புகிறேன் என்று கூறினார் ” என்று தெரிவித்துள்ளார்!