‘ரியல் கேப்டன் டூ ரீல்ஸ் கேப்டன்’னாக மாறிய ஷிகர் தவான்! வீரர்களுக்கு டான்ஸ் ஆட சொல்லிக்கொடுத்த தவான் – வீடியோ!

0
1454

ஒருநாள் தொடரை கைப்பற்றிய பிறகு அணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி மகிழ்ந்த ஷிகர் தவானின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரல் ஆகி உள்ளது.

தென்னாபிரிக்கா அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி மைதானத்தில் 11ம் தேதி நடந்தது. முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை செலக்ட் செய்தது இந்தியா.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்திய அணியின் பந்துவீச்சுக்கு துவக்கம் முதலே ரன் எடுக்க முடியாமல் திணறி, விக்கெட் இழந்தனர். 66/5 என இருந்தபோது கீழ் வரிசை வீரர்களும் சுதாரிக்கவில்லை. 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. க்ளாஸன் மட்டுமே போராடி 34 ரன்கள் எடுத்திருந்தார். சூழலில் கலக்கிய குல்தீப் 4 ஓவர்களில் 1 மெய்டன் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிராஜ், சபாஷ் அகமது மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியார் ஆளுக்கு 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

100 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தவான் விரைவில் அவுட் ஆனாலும், கில் நிலைத்து ஆடி, 49 ரன்களுக்கு வேகியேறினார். நல்ல பார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் 23 பந்திலே 28 ரன்கள் அடித்து 19.1 ஓவரில் இலக்கை எட்ட உதவினார். 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்த இந்தியா, 7 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரை 2-1 என கைப்பற்றியது.

ஒருநாள் தொடரை வழிநடத்திய கேப்டன் தவான், போட்டி முடிந்து தொடரை கைப்பற்றிய பிறகு சக அணி வீரர்களுடன் கொண்டாட தவறவில்லை. ஒருபடி மேலே சென்று, வீரர்களுக்கு டான்ஸ் சொல்லி கொடுத்து ஆடவைத்தார். இதன் வீடியோ சோசியல் மீடியாவில் வெகுவாக பரவி வருகிறது.